இந்த ஆழ்துளைக் கிணறு கடந்த 7 ஆண்டுகளாக கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. (Representational image)
Chandigarh: பஞ்சாபில் இரண்டு வயதே ஆன குழந்தை 150 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து விட்டது. பஞ்சாப் மாநிலம் சங்க்ரர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த குழந்தை 110 அடி தூரத்தில் மாட்டியிருக்கலாம் எனத் தெரிகிறது. ஆழ்துளைக் கிணற்றின் அகலம் 9 இஞ்ச் மட்டுமே உள்ளது.
குழந்தை சுவாசிக்க போதுமான ஆக்ஸிஜன் கிடைக்குமாறு மருத்துவக் குழு ஏற்பாடு செய்துள்ளது. தொடர்ந்து கேமரா மூலமாக குழந்தை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மருத்துவரும் உள்ளார் எனத்தெரிய வந்துள்ளது.
மீட்புக் குழுவினர் ஆழ்துளைக் கிணற்றுக் கீழ் அருகில் மற்றொரு குழி தோண்டப்பட்டு குழந்தையை மீட்க பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.
மீட்புக் குழுவினருடன் தேசிய பேரிடர் மேலாண்மையும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். உள்ளே கயிறினை போட்டு குழந்தையை தூக்க முயற்சித்தும் பலன் இல்லை. இந்த ஆழ்துளைக் கிணறு கடந்த 7 ஆண்டுகளாக கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.