மேட்டூர் அணையின் நீர்வரத்து 60,000 கனஅடியில் இருந்து 31,400 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீர்வரத்து குறைந்துள்ளதால், நீர் திறப்பும் 33,970 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 120.25 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று 120 அடியாக குறைந்துள்ளது.
காவேரி டெல்டா விவசாயிகளுக்கு மேட்டூர் அணை நீர் மிகவும் முக்கியமானது. ஜுலை 19 ஆம் தேதி அன்று, மேட்டூர் அணையில் நீர் நிரம்பியதால், பாசனத்திற்கு திறந்து விடப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஜூலை 23 ஆம் தேதி, மேட்டூர் அணையின் அதிகபட்ச கொள்ளவை நீர் எட்டியது குறிப்பிடத்தக்கது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)