This Article is From Jul 16, 2018

160 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வீடியோ கான்பரன்ஸிங் முறையில் தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலங்களையும், சாலைகளையும் திறந்துவைத்தார்

160 கோடி ரூபாய்  மதிப்பிலான திட்டங்களைத் திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று 160 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 6 ஆற்றுப் பாலங்கள், 3 ரயில்வே பாலங்களை வீடியோ கான்பரன்ஸிங் முறையில் திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வீடியோ கான்பரன்ஸிங் முறையில் தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலங்களையும், சாலைகளையும் திறந்துவைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,  முகலிவாக்கம், எண்ணூர், புழல், கதிர்வேடு ஆகிய இடங்களில் கட்டப்பட்ட பூங்காக்கள், விளையாட்டு மைதானம், சாக்கடைத் திட்டம், வார்டு கட்டிடம் என 103 கோடியோ மூன்று லட்சம் மதிப்பிலான திட்டங்களைத் துவக்கி வைத்தார்.

போத்தனூரில் 22 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

புவனகிரி அருகே 22 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம்; நந்திமங்கலம்-பூலாமேடு கிராமங்களுக்கு இடையே 7 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் உட்பட திருச்சி ரெயில்வே மேம்பாலம், தூத்துகுடி மாவட்டத்தில் ஒரு மேம்பாலம் என மொத்தம் 160 கோடி ரூபாய் மதிப்பிலான 6 ஆற்றுப் பாலங்களையும், 3 ரயில்வே பாலங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.