This Article is From Feb 07, 2019

சோனியா மருமகன் ராபர்ட் வதேராவிடம் 5 மணிநேரம் விசாரணை – இன்றும் நீடிக்கிறது

சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேராவிடம் (Robert Vadra) டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேரமாக விசாரணை நடத்தியுள்ளனர்.

Robert Vadra: குற்றச்சாட்டுகளை ராபர்ட் வதேரா மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹைலைட்ஸ்

  • லண்டனில் சட்டவிரோதமாக சொத்து வைத்திருப்பதாக வதேரா மீது புகார்
  • தன் மீதான குற்றச்சாட்டுகளை ராபர்ட் வதேரா மறுத்துள்ளார்
  • இன்றைக்கும் ராபர்ட் வதேராவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது
New Delhi:

சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேராவிடம் (Robert Vadra) டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேரமாக விசாரணை நடத்தியுள்ளனர். இன்றைக்கும் அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. பிரியங்கா காந்தி நேரடி அரசியலில் இறங்கியுள்ள நிலையில், அவரது கணவர் மீதான விசாரணை தீவிரம் அடைந்திருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா நேற்று அஜரானார். அவரிடம் லண்டனில் சொத்துகள் தொடர்பாகவும், பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. அவர் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இன்றைக்கு மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் சுமார் 19 லட்சம் பவுண்டுகள் மதிப்பிலான சொத்து ஒன்றை வாங்கிய ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா என்பவருடன் சேர்ந்து இந்த தொகையை கள்ளத்தனமான பணப்பரிமாற்றம் மூலம் செலுத்தியதாக மத்திய பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், வதோராவுக்கு அந்த சொத்துகள் எப்படி வந்தது என்பதை மட்டும் எங்களிடம் விளக்கம் வேண்டும் என அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

வதோராவின் மனைவி பிரியங்கா காந்தி வதோரா கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நேரடி அரசியலில் இறங்கினார். இதைத்தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ராபர்ட் வதேரா மீதான விசாரணை தீவிரம் அடைந்திருக்கிறது. இதுதொடர்பாக வதோரா கூறும்போது, அரசியல் காரணங்களுக்காக தன் மீது தேவையற்ற, நியாயமற்ற மற்றும் தீங்கிழைக்கும் குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது என்றார். 

.