This Article is From Nov 08, 2019

Kamal Haasan's Birthday: சொந்த ஊரில் பிறந்தநாள் கொண்டாட்டம்; புகைப்படங்கள் உள்ளே...!

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தின் மூலம் அறிமுகமான கமலுக்கு இது 60 வது ஆண்டு. இந்நிலையில் இவரது பிறந்த நாளை 3 நாள்களுக்கு பிரமாண்ட விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Kamal Haasan's Birthday: சொந்த ஊரில் பிறந்தநாள் கொண்டாட்டம்; புகைப்படங்கள் உள்ளே...!

Happy birthday, Kamal Haasan (courtesy faroutakhtar)

ஹைலைட்ஸ்

  • Kamal Haasan is currently in his hometown in Tamil Nadu
  • Akshara and Shruti shared pics from the celebrations
  • They also shared adorable birthday wishes for Kamal Haasan
New Delhi:

இன்று நடிகர் கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள். 1959 ஆம் ஆண்டு 5 வயது சிறுவனாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் கமல்ஹாசன்.

 
‘களத்தூர் கண்ணம்மா' படத்தின் மூலம் அறிமுகமான கமலுக்கு இது 60 வது ஆண்டு. இந்நிலையில் இவரது பிறந்த நாளை 3 நாள்களுக்கு பிரமாண்ட விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 65வது பிறந்தநாளை தன் சொந்த ஊரான பரமக்குடியில் தன் குடும்பத்துடன் கொண்டாடுகிறார். 

மகள்கள் ஸ்ருதி மற்று அக்‌ஷரா இருவரும் அப்பா கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 

அதற்காக தன் இரு மகள்கள் மற்றும் சாருஹாசனுடன் பரமக்குடிக்கு சென்றுள்ளார். இன்று கமலின் தந்தை டி. சீனிவாசனின் நினைவு தினம் என்பதால் சொந்த ஊரான பரமக்குடியில் சீனிவாசனின் சிலையைத் திறந்து வைக்கிறார். இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர். 

tfugu5eg
8aslnvqo
6jvt19ig
sjkuuj0o

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள கமலில் குடும்ப உறுப்பினர்கள் பரமக்குடிக்கு வருகை தந்துள்ளார்கள். இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

.