This Article is From Jan 13, 2020

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் பென்ஷன்!! உத்தராகண்ட் அரசு நடவடிக்கை!

பென்ஷன் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்தாகவும், விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா தெரிவித்துள்ளார்.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் பென்ஷன்!! உத்தராகண்ட் அரசு நடவடிக்கை!

ரூ. 7 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரையில் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிகிறது.

Dehradun:

இந்தி நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள 'சப்பாக்' திரைப்படத்தின் தூண்டுதல் காரணமாக, உத்தரகாண்டில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மாநில அரசு கொண்டு வரவுள்ளது. 

உத்தரகாண்டின் ஹரித்வார், நைனிடால் மற்றும் உதம் சிங் நகர் மாவட்டங்களில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட 10 பெண்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. 

இதுதொடர்பாக திட்ட மாதிரி தயாரிக்கப்பட்டு, அது உத்தரகாண்ட் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்த தகவலை மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டால், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 7 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரையில் உதவித் தொகையாக கிடைக்கும். 

பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள 'சப்பாக்' திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இதனை மேக்னா குல்சார் இயக்கியுள்ளார். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்தவரும் சமூக ஆர்வலருமான லட்சுமி அகர்வாலின் வாழ்க்கையின் அடிப்படையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.