This Article is From Sep 23, 2019

83-வது வயதில் எம்.ஏ. இங்லீஷ் பட்டம் பெற்ற முதியவர்! #InspiringStory

எம்.ஏ. படிக்க வேண்டும் என்ற முடிவை சோகன் சிங் 2018-ல் எடுத்தார். தொடர் முயற்சியால் அனைத்து பேப்பரையும் கிளியர் செய்து தற்போது பட்டதாரி ஆகியுள்ளார்.

83-வது வயதில் எம்.ஏ. இங்லீஷ் பட்டம் பெற்ற முதியவர்! #InspiringStory

மனைவியுடன் சோகன் சிங்.

Hoshiarpur:

பட்டம் பெறுவதற்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் பஞ்சாபை சேர்ந்த சோகன் சிங். 83-வயதில் எம்.ஏ. இங்லீஷ் பட்டம் பெற்று மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறியிருக்கிறார். 

பஞ்சாப் மாநிலம் ஹோஷிர்பூர் மாவட்டம் மகில்பூரை சேர்ந்தவர் சோகன் சிங் கில். 83-வயதான இவர் கடந்த 1958-ல் திருமணம் முடித்தார். இதன்பின்னர், மனைவியுடன் வேலைக்காக கென்யாவுக்கு சென்று விட்டார். 

அங்கு குழந்தைகளுக்கு மொழிகளை கற்றுக்கொடுக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டது. 1991-ல் சோகன் சிங் இந்தியா திரும்பினார்.

சமீபத்தில் அவரை சந்தித்த கல்லூரி பேராசிரியர்கள் எம்.ஏ. இங்லீஷ் படி என்று அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து 2018-ல் படிக்க முடிவு செய்த சோகன் சிங், அனைத்து பேப்பர்களையும் கிளியர் செய்து தற்போது எம்.ஏ. இங்லீஷ் பட்டதாரி ஆகியுள்ளார். 

ஜலந்தர் பல்கலைக் கழகம் அவருக்கு பட்டத்தை வழங்கியுள்ளது. இதுகுறித்து சோகன் சிங் கூறுகையில், ' தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு நம் நாட்டிலேயே வேலை வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் வெளிநாடு செல்லத் தேவையில்லை' என்றார். 

.