This Article is From Oct 23, 2019

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!!

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்களை மேற்கொள்ள முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

இந்தக் கூட்டத்தில் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தற்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட திட்டங்களும், அதன் முன்னேற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், உடனடித் தேவைகள் மற்றும் கூடுதல் உபகரணங்கள், சிறப்புக் கருவிகள் போன்றவை வாங்குவதற்கும் 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, இந்த கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்களை முதல்வர் பழனிசாமி பட்டியலிட்டார்.

அதன்படி, மழை காலங்களில் கீழே விழும் மரங்களை உடனே அகற்ற தேவையான ஆட்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், தேங்கிய நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். 

Advertisement

மீட்புக்குழு குறுகிய கால அளவில் மழை பாதித்த பகுதியை அடைய தேவையான உபகரணங்கள் தயாராக இருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மருந்துகளை இருப்பு வைக்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

பேரிடர் காலங்களில் பற்றாக்குறையினை தவிர்க்கும் பொருட்டு இரண்டு மாத காலத்திற்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் நியாய விலைக்கடைகளில் போதுமான அளவில் இருப்பில் வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.

Advertisement

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வயிற்றுப் போக்கு மற்றும் தொற்றுநோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
 

Advertisement