This Article is From Feb 01, 2019

மத்திய இடைக்கால பட்ஜெட்: அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு!

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளார். 

Advertisement
தமிழ்நாடு Posted by

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட கடைசி பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது

Highlights

  • தேர்தலுக்கு முன்னர் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது
  • விவசாயிகளுக்கு அடிப்படை வருமானம் அளிக்கப்படும், பட்ஜெட்டில் தகவல்
  • 5 லட்சம் வரை வருமான வரி விலக்கு உச்சவரம்பு, பட்ஜெட்டில் அறிவிப்பு

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட கடைசி பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்ஜெட்டை வரவேற்று பேசியுள்ளார் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்.

‘5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களுக்கு, வருமான வரி கிடையாது. 6.5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் பி.எஃப் உள்ளிட்ட முதலீடு செய்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் வரி கிடையாது. இதன் மூலம் 3 கோடி நடுத்தர மக்கள் பயன் பெறுவார்கள்' என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டார் நிதி அமைச்சர் பியூஷ் கோயல். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ‘தனி நபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோல, மீன் வளத் துறைக்குத் தனியாக அமைச்சகம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதும் சிறப்பு. இது மீன் வளத் துறைக்குப் பொன்னாளாக இருக்கும்' என்று கருத்து தெரிவித்துளார்.

Advertisement


 

Advertisement