தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கோடை வெயில் அதிகரித்ததால் வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ளது. பகல் நேரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்த துவங்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரியிலும் வெயில் தீவிரமடைந்துள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய முகநூல் பக்கத்தில், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெயில் 39-40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். கடலோர மாவட்டங்களை விட உள்மாவட்டங்களில் வெப்பத்துடன் காற்று வீசுவதால் உள்மாவட்டங்களில் வெயில் கூடுதலாக இருக்கும் . சென்னையைப் பொறுத்த மட்டில் சென்னைய் சுற்றியுள்ள போரூர், பூந்தமல்லி, அம்பத்தூர், ஆவடி ஆகிய இடங்களில் வெயில் கூடுதலாகவும், கடற்கரையையொட்டி உள்ள மைலாப்பூர், எக்மோர், நுங்கம்பாக்காம், சோலிங்கநல்லூர் போன்ற பகுதியில் வெயில் சற்று குறைவாக இருக்கும். அதிக அழுத்தம் அதிகரிக்கும் நிலையில் மழைக் குறைவாகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்
நேற்றைய வெப்ப நிலையை பொறுத்தவரை 10 மாவட்டங்களில் இயல்பு நிலையை விட 3 டிகிரி செல்ஷியஸ் வெயில் அதிகரித்துள்ளது. வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி கரூர், திண்டுக்கல் மதுரை மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்பட்டது. சேலத்தில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஷ் பதிவானது.