বাংলায় পড়ুন Read in English
This Article is From Jun 26, 2020

ஜூலை 15ம் தேதி வரை சர்வதேச விமானங்கள் ரத்து! விமான போக்குவரத்து அமைச்சகம்!

எனினும், சரக்கு விமான போக்குவரத்திற்கு எந்த தடையும் விதிக்கவில்லை என்று தெரிவக்கப்பட்டுள்ளது. 

Advertisement
இந்தியா

ஜூலை 15ம் தேதி வரை சர்வதேச விமானங்கள் ரத்து! விமான போக்குவரத்து அமைச்சகம்!

Highlights

  • ஜூலை 15ம் தேதி வரை சர்வதேச விமானங்கள் ரத்து!- மத்திய அரசு
  • உள்நாட்டு விமான சேவைகள் மட்டும் மே மாதம் முதல் மீண்டும் தொடங்கியது.
  • சிறப்பு விமான போக்குவரத்திற்கும் எந்த தடையும் விதிக்கவில்லை
New Delhi:

இந்தியாவில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் வெளிநாட்டு விமான சேவைகள் வரும் ஜூலை 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. எனினும், சரக்கு விமான போக்குவரத்திற்கும், சிறப்பு விமான போக்குவரத்திற்கும் எந்த தடையும் விதிக்கவில்லை என்று தெரிவக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, அனைத்து பயணிகள் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, உள்நாட்டு விமான சேவைகள் மட்டும் மே மாதம் முதல் மீண்டும் தொடங்கியது. 

இதனிடையே, சிவில் விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி கடந்த வாரம் கூறும்போது, கொரோனா வைரஸ் தொற்று யூகிக்கக்கூடிய வகையில் இருந்தால், ஜூலை மாதத்தில் மீண்டும் பயணிகள் விமான சேவையை தொடங்குவது குறித்து இந்தியா முடிவெடுக்கும் என்று கூறியிருந்தார். 

Advertisement

எப்போது சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என்று என்னிடம் அடிக்கடி கேள்வி எழுப்பப்படுகிறது. வைரஸூன் தீவிரம் குறித்து எங்களுக்கு சுற்றுச்சூழல் அமைப்புகள் முன்கூட்டியே தெரிவித்தால், வரும் மாதத்தில் நாம் மீண்டும் சேவையை தொடங்க முடியும் என்று நினைக்கிறேன். ஆனால், இது இந்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தால் எடுக்கப்பட்டது அல்ல. இந்த முடிவுகள் உள்நாட்டு நிலைமையைப் ஆய்வு செய்த பின்னர் அரசு எடுக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

உள்நாட்டு விமானப் போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலையில் இருந்தது போல் 50-55 சதவீதத்தை எட்டும் போது,  மாநிலங்கள் அதிக பயணிகளை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருந்தால், சர்வதேச பயணங்களை மீண்டும் தொடங்குவது குறித்து ஒரு முடிவை எடுக்க முடியும் என்றும், விமான போக்குவரத்து அமைச்சர் கூறியுள்ளார். 

Advertisement

எப்படியிருந்தாலும், இதில் எங்களது முடிவு மட்டுமல்ல. பயணிகள் மற்றும் முழு சுற்றுச்சூழல் அமைப்பு உட்பட அனைத்து பங்குதாரர்களும் எடுக்கும் முடிவு என்று அவர் கூறினார்.

Advertisement