This Article is From Dec 24, 2019

பொருளாதார மந்த நிலையை சீராக்க அவசரகால நடவடிக்கை தேவை : ஐ.எம்.எஃப் தகவல்

தற்போதைய வீழ்ச்சியை நிவர்த்தி செய்வதற்கும் இந்தியாவை உயர் வளர்ச்சி பாதையில் திருப்புவதற்கும் அவசர கொள்கை நடவடிக்கைகள் தேவை என்று தெரிவித்துள்ளார்.

பொருளாதார மந்த நிலையை சீராக்க அவசரகால நடவடிக்கை தேவை : ஐ.எம்.எஃப் தகவல்

ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மெதுவாக வளர்ந்து வருகிறது.

ஹைலைட்ஸ்

  • "India in the midst of a significant economic slowdown," says IMF
  • The IMF in October slashed its forecast for 2019 by nearly a full point
  • RBI cut the key lending rate five times this year
Washington, United States:

சர்வதேச நாணய நிதியம் இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலையை மாற்ற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. 

நுகர்வு மற்றும் முதலீடு குறைந்து வருவது மற்றும் வரிவருவாய் வீழ்ச்சி ஆகியவை உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு தடையாக இருக்கும் காரணிகள் எண்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 

மில்லியன் கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்ட இந்தியா தற்போது ஒரு குறிப்பிடத்தக்க பொருளாதார மந்த நிலையின் மத்தியில் உள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசியா மற்றும் பசிபிக் துறையின் ரணில் சல்கடே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தற்போதைய வீழ்ச்சியை நிவர்த்தி செய்வதற்கும் இந்தியாவை உயர் வளர்ச்சி பாதையில் திருப்புவதற்கும் அவசர கொள்கை நடவடிக்கைகள் தேவை என்று தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் வளர்ச்சியை ஆதரிப்பதற்கான செலவினங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கத்திடம் போதிய இடம் உள்ளது. குறிப்பாக அதிக கடன்நிலைகள் வட்டி செலுத்துதல்களும் நிதியினை எச்சரித்துள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் கடந்த வாரம் இந்தியாவின் மந்த நிலை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள உலக பொருளாதார அவுட்லுக்கில்  இந்திய பொருளாதாரத்திற்கான அதன் வளர்ச்சி கணிசமாக குறைந்தது குறித்த மதிப்பீடுகள் குறிப்பிடப்படவுள்ளது. 

அக்டோபரில் சர்வதேச நாணய நிதியம் 2019 ஆம் ஆண்டிற்கான கணிப்பை கிட்டத்தட்ட 6.1சதவீதம் குறைத்துள்ளது. அதே நேரத்தில் 2020க்கான எதிர்பார்ப்பு 7.0 சதவீதமாக குறைந்தது. 

பொருளாதார மந்த நிலை தொடர்ந்தால் நாட்டின் மத்திய வங்கி கடன் வட்டி விகிதத்தை மேலும் குறைக்கும் வாய்ப்பிருக்கிறது என்று சல்கடோ தெரிவித்தார்.

நுகர்வோர் தேவை மற்றும் உற்பத்தி நடவடிக்கை ஒப்பந்தங்கள் என மத்திய வங்கி அதன் வருடாந்திர வளர்ச்சி கணிப்பை 6.1 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைத்தது. 

இந்திய பொருளாதாரம் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மெதுவாக வளர்ந்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

பொருளாதார சீர்திருத்த முறையை புதுப்பிக்க வேண்டும்  என்றும் அதனால் பொருளாதாரத்தில் கடன் வழங்கவும் அதன் திறனை மேம்படுத்தவும் முடியும் என்று சல்கடோ தெரிவித்தார். 

.