Read in English
This Article is From May 12, 2020

உலக செவிலியர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

செவிலியர் பணிக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல். அவரது பிறந்த நாளான மே 12-ம் நாள் சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டில் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக் கூறியுள்ளனர்.

Advertisement
இந்தியா Written by

ஆண்டுதோறும் மே 12-ம் நாள் சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

Highlights

  • உலக செவிலியர் தினம் இன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது
  • செவிலியர்களுக்கு பல்வேறு அரசியல், அமைப்புகளின் தலைவர்கள் வாழ்த்து
  • பிரதமர் மோடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து

உலக செவிவிலியர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. முன்னெப்போதையும் விட இந்த கொரோனா காலத்தில் செவிலியர்களின் உதவி மனித சமூகத்திற்கும் அதிகமாக தேவைப்படுகிறது.

இந்த நிலையில் செவிலியர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-

உலகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக செவிலியர்கள் இரவு பகல் பார்க்காமல் உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றி செலுத்துவதற்கு இந்த சர்வதேச செவிலியர் தினம் சிறப்பான நாளாக இருக்கும். தற்போது செவிலியர்கள் கொரோனா வைரசுக்கு எதிராக மிகக் கடுமையாக போராடி வருகின்றனர். இந்த நேரத்தில் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேலால் ஈர்க்கப்பட்ட நமது செவிலியர்கள் மிகுந்த இரக்கத்துடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் நலனிலும், செவிலியர்களுக்கான பணி வாய்ப்புகளிலும் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்துவோம். இதனால் அவர்களின் சேவை மக்களுக்கு அதிகளவு நிவர்த்தி செய்யப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

Advertisement

செவிலியர் பணிக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல். அவரது பிறந்த நாளான மே 12-ம் நாள் சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டில் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக் கூறியுள்ளனர். 

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், ''அன்னையரைப் போல் பரிவோடு தன்னலம் கருதாது மக்களைக் காக்கும் மகத்தான சேவைபுரியும் செவிலியர்கள் நல்ல உடல்நலத்தோடு நலம்பெற்று வாழ எனது அன்பார்ந்த உலக செவிலியர் தின வாழ்த்துகள்! இக்கொரோனா காலத்திலும் இரவுபகல் பாராமல் அயராது சேவையாற்றும் செவிலியர்களின் அர்ப்பணிப்பிற்கு தலைவணங்குகிறேன்.'' என்று கூறியுள்ளார். 

Advertisement

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், 'உலகமே கொரோனா போர்க்களமாக மாறியுள்ள சூழலில், தங்கள் உயிரைத் துச்சமென நினைத்து, தாயுள்ளத்துடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் தி.மு.க சார்பில் #InternationalNursesDay நல்வாழ்த்துகள்! செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற தி.மு.க என்றும் துணை நிற்கும்' என்று கூறியுள்ளார். 

Advertisement