This Article is From Mar 08, 2019

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடம் - ஆட்டோ மொபைல் துறை வல்லுநர் சந்தியா ஹரிஹரன்

ஜி.எஸ்.டி வரி  அதிகமாக இருந்தாலும் இதற்கு முன்பு இருந்ததுபோல் வாட் போன்ற பல வரிகளைக் கட்டாமல் ஒற்றை வரியாகக்  கட்டுவது என்பது  எளிதாகவே இருக்கிறது என்கிறார்.

Advertisement
இந்தியா Written by

பெண்கள் அதிகமில்லாத ஆட்டோ மொபைல் இன்ஞ்னியரிங் உற்பத்தி துறையில் நீண்ட வருட அனுபவம் பெற்ற ஶ்ரீமுகா பிரிசிஸ்சன் (srimukha Precision) நிறுவனத்தின் இயக்குநரான சந்தியா ஹரிஹரனிடம் ஆட்டோமொபைல் துறையில் பெண்களுக்கான வாய்ப்புகளை பற்றிப் பேச அணுகினோம். தன்னுடைய வெற்றிகரமான தொழிற்பயணத்திற்கு தொழிலை கற்றுக் கொடுக்கத் தொடங்கிய தன் மாமனாருக்கும் தனக்குப்பின் தன்குழந்தைகளை கவனமாக கவனித்துக் கொண்ட மாமியாருக்கும் தன்னுடைய வெற்றியில் பெரும் பங்கு உண்டு என மகிழ்ச்சியோடுதன் அனுபவங்களை பகிரத் தொடங்கினார்.

திருமணத்திற்குப் பின் தன்னுடைய கணவர் வீட்டின் குடும்பத் தொழில் பங்கேற்று பல ஆண்டுகால வருடத்திற்கு பின் கடந்த 5வருடங்களாக 2 உற்பத்தி யூனிட்டை தன்னிச்சையாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தன்னுடைய படிப்பு தகவல் தொழில் நுட்பத்துறையில் இருந்தாலும் அனுபவத்தின் வழி படிப்படியாக ஆட்டோ மொபைல் துறையின் நுட்பங்களைத் தெரிந்துகொண்டார்.தொழில்சார்ந்த அறிவு இருந்தால்தான் பணியாளர்களின் வேலைகளை மேற்பார்வையிட முடியும். அவர்களுக்கு வேலை என்ன அதைபொறுப்பாக எப்படி செய்யவேண்டும் என்பதைக் கூறி வழி நடத்த முடியும் என்கிறார். குறிப்பாக பெண்கள் தலைமைப் பணிக்கு வரும்போது கூடுதல் தொழில் நுட்ப அறிவும் மல்டி டாஸ்கிங் தகுதியும் இருக்கும் பொழுது பணியாளர்களை எதிர்கொள்ள முடியும் என்றார்.

Advertisement

இன்றைய காலச் சூழலில் பணியாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்கு நல்ல சம்பளம், ஈஎஸ் ஐ பி.எஃப் என்று கொடுத்தாலும்பணத்தையும் தாண்டி அவர்களின் நலம் சார் விஷயங்களை செய்யும் போதுதான் நிறுவனத்துடன் இணைந்து நீண்ட நாள்பணிபுரிவார்கள். தொழிலாளர்களுக்கு தோன்றும் ஐடியாக்களையும் சரியான முறையில் கேட்டு அவை நன்றாக இருந்தால் பரிசீலிந்துஅதை நிறுவனத்தில் செயல் படுத்த வேண்டும். இப்படி நலம் சார் செயல்பாட்டுகளுடன் அவர்களின் க்ரீயேட்டிவ் திறமையையும்பயன்படுத்தினால் மட்டுமே தொழிலாளர்களை தக்க வைக்க முடியும் என தெளிவாக பேசுகிறார் சந்தியா. ஜி.எஸ்.டி வரி அதிகமாக இருந்தாலும் இதற்கு முன்பு இருந்ததுபோல் வாட் போன்ற பல வரிகளைக் கட்டாமல் ஒற்றை வரியாகக் கட்டுவது என்பது எளிதாகவே இருக்கிறது என்கிறார்.

பிற பணியிடங்களில் வேலை பார்ப்பது போல நேரத்திற்கு வீடு திரும்ப முடியாது. நிறுவனத்தின் உரிமையாளர் என்கிற நேரம் காலம்என்று இல்லாமல் வேலை பார்க்க வேண்டும். இதனால் வீட்டையும் வேலையும் சரியாக பேலன்ஸ் செய்யவது மிகவும் அவசியம். எனக்கு குழந்தைகளின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்ற குற்ற உணர்வு ஏற்படும். என் குழந்தைகளும் என் வேலைச்சூழலை புரிந்து கொள்ளவும் செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடம் கற்றுக் கொள்ளத் தயராக இருந்தால் எந்தத்துறையிலும் சாத்தியம் என்று பேசும் சந்தியாவின் குரலில் நம்பிக்கை மிளிர்கிறது.

Advertisement
Advertisement