International Women's Day: இந்திரா காந்தி நாட்டின் முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர்
New Delhi: உலக மகளிர் தினம் மார்ச் 8 நாளை கொண்டாடப்படவுள்ளது. காங்கிரஸ் கட்சி இதற்காக தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டி ஒன்றை நடத்துகிறது. அந்த போட்டியின் பெயர் “இந்திய அரசியலில் பெண்களின் வரலாறு'. அந்தப் போட்டியில் 3 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்? முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யார்? இந்திய மாநிலங்களில் முதல் பெண் முதலைமைச்சர் யார்? எனக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி நாட்டின் முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆவார். நிர்மலா சீதாராமன் அல்ல என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியினர் நினைவூட்டி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலக ட்விட் பக்கம் “இந்தியாவின் முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் தமிழகத்திலிருந்து வந்தவர் என்று நான் பெருமிதம் கொள்கிறேன்” என ட்விட் செய்திருந்தது.
இதற்கு காங்கிரஸ் கடுமையான முறையில் தங்களுடைய பதிலை தெரிவித்திருந்தது. “உங்களின் கவனத்திற்கு, இந்திரா காந்தி தான் இந்தியாவின் முதல் பாதுகாப்பு துறை அமைச்சர். ஒரு வேளை நீங்கள் அரசியல் அறிவியல் பகுதியை தவறவிட்டிருந்தால் நீங்கள் வரலாற்றை தூசி தட்டும் காலம் வந்து விட்டது.” எனப் பதிலடி கொடுத்திருந்தது.
இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த பொழுது 1980-82 வரை பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்துள்ளார். உலக பெண்கள் தினப் போட்டியை காங்கிரஸ் மார்ச் 8 அன்று முடிவடைகிறது. பரிசு தொகை ரூ. 10,000 என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த போஸ்ட்டின் கீழே கமெண்ட் பாக்ஸில் பதில்களை தெரிவித்தும் நண்பர்களை டேக் செய்தும் வருகின்றனர்.