This Article is From Mar 08, 2019

“இந்தியா வந்த பின்தான்சாதின்னா என்னன்னுதெரியும்!” - மனம்திறக்கும் “டோர் நம்பர்403”-யின் இயக்குநர் யாஸ்மின் பர்வின்

“கருத்தியலாக எத்தனை விஷயங்கள் மனதில் தோன்றினாலும், என் மனதிற்குள் கேமராவைத்து பார்த்த காட்சிகளையே எழுதமுயல்கிறேன். வார்த்தைகளாக எழுதியதை என்னுடைய கேமரா மேன், ஆர்ட்டைரக்டர், நடிகர், என அனைத்துக் கலைஞர்களின் உதவியுடன் திரை வடிவம் கொடுக்க முடிகிறது”

“இந்தியா வந்த பின்தான்சாதின்னா என்னன்னுதெரியும்!” - மனம்திறக்கும் “டோர் நம்பர்403”-யின் இயக்குநர் யாஸ்மின் பர்வின்

இன்றைய காலஇளைஞர்கள், தங்களதுநட்பின் காலம் மீண்டும் கிடைக்காதா என்று ஏங்க வைத்த வெப் சீரிஸ்“டோர் நம்பர் 403”. பாலினம் பார்க்காத நட்பையும் கொண்டாட்டமான வாழ்வையும் தன்னுடைய முதல் வெப் சீரிஸில் தெளிவாக பதிவு செய்த இயக்குநர் யாஸ்மின் பர்வின் அலிஸை சந்தித்தோம். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர். வசந்தம் டிவி-யில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, ‘தோல்வியடைந்தாலும் சரி எதாவது பெரிதாக செய்ய வேண்டுமென' எண்ணி தன்னுடைய விருப்பமாக இருக்கும் சினிமாவில் சாதிக்க இந்தியா வர முடிவெடுத்தார்…

அடுத்த 1 வருடத்தில்வீட்டில் அம்மா, அப்பாவைசமாதனப்படுத்தி இந்தியாவர அனுமதி வாங்கி,கையில் இருந்த கொஞ்சநஞ்ச பணத்துடன்இங்கு வந்துவிட்டார். இந்தியா வந்ததும்இங்குள்ள கலாசாரமுறைகள் மிகவும்அதிர்ச்சியளித்ததாககூறும் யாஸ்மின், இங்குவந்த பின்னர்தான் ‘சாதி என்றால் என்ன'என்பதையே தெரிந்துகொண்டதாகக்கூறுகிறார். இந்தியாவந்து பல படங்கள், விளம்பர நிறுவனங்களில்வேலை பார்த்துள்ளார். சப்டைட்டில் செய்துகொடுக்கும் நிறுவனம்ஒன்றையும் நடத்திவந்துள்ளார்.

lv0qo208

‘வேலைக்காரன்' படத்தில் இயக்குநர் ராஜாவிடம் துணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். இயக்குநர் ராஜாவுடன் பணி புரிந்த காலம், திரைக்கதைகுறித்து யாஸ்மினுக்குக் கூடுதல் புரிதலை கொடுத்துள்ளது.

வேலைக்காரன் படம்முடிந்ததும் இயக்குநர்பணியில் தனக்கு உள்ள பலம் என்ன, பலவீனம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவே இந்த வெப் சீரியஸை எடுத்ததாக கூறும் யாஸ்மின், தான் அறிந்த வாழ்வியல் முறையே தொடராக எடுத்துள்ளார். யாஸ்மின்க்குத் தன் வளர்ப்பின் வழிகிடைத்த சுதந்திரமும் அதன் வழி கிடைத்த தன்வாழ்வின் அனுபவத்தையும் இந்தத் தொடரில் பார்க்கமுடிகிறது.

“திரைக்கதையை எப்படி எழுதுகிறீர்கள்?” என்று கேட்டால், “கருத்தியலாக எத்தனை விஷயங்கள் மனதில் தோன்றினாலும், என் மனதிற்குள் கேமரா வைத்து பார்த்த காட்சிகளையே எழுத முயல்கிறேன். வார்த்தைகளாக எழுதியதை என்னுடைய கேமரா மேன், ஆர்ட்டைரக்டர், நடிகர், என அனைத்துக் கலைஞர்களின் உதவியுடன் திரை வடிவம் கொடுக்க முடிகிறது” என்று பளீச் பதில் கொடுக்கிறார்.

தொடர்ந்து, “நடிகர்என்பவர் யார்…?” என்ற கேள்விக்கு, “கதையின் கதாபாத்திரங்களுக்கு உயிர்ப்பை கொடுப்பவரே சிறந்த நடிகர். இயக்குநர் எந்தவொரு கதாபாத்திரத்தை உருவாக்கினாலும் அதற்கு நடிகருக்கு சுதந்திரம் கொடுத்து அவரின் தனித்துவமான ஸ்டைலும் வரும்போதுதான் அது முழுமைபெறும்” என்று சொல்லும் பதிலில் யாஸ்மினின் தெளிவு தெரிகிறது.

i4971cpo

“உங்கள் தொடரில் மது அருந்துவதை கொண்டாட்டமாக காட்சி படுத்தியிருக்கிறீர்களே?” என்று அடுத்த கேள்வியை வீசினால், நிதானமாக, “என்னுடைய தொடரைப் பார்த்த 95 சதவீத பேர் தன் நண்பர்களுடன் இருந்தகாலத்தை நினைவு படுத்துகிறது என்று தான் சொன்னார்கள். மது அருந்தவது என்பதுஅவரவர் லைஃப் ஸ்டைல் சாய்ஸ். நான் மது அருந்தினால் மட்டுமே மகிழ்ச்சி என்று ஒருபோதும் கூறவில்லை. இன்றைய கால இளைஞர்கள் சாமர்த்தியசாலிகள். அவர்களுக்கு மதுவை எப்படி கையாளும் வேண்டும் என்பதை நன்கு அறிவார்கள்” என்று காத்திரமான பதிலையே முன்வைக்கிறார்.

தன்னைப் பார்த்ததும் முன்முடிவு எடுத்துக்கொள்ளும் பலர் தன்பெயரைக் கேட்டதும், ‘எப்படி விட்டாங்க…?' என்று அதிர்ச்சியடைவதாகக் கூறுகிறார். “ஒருகட்டத்தில் இந்த முன்முடிவுகளை குறித்துவருத்தப்பட்டாலும், பின் அதையே எனக்கான பலமாக மாற்றிக் கொண்டேன். என்னுடைய பெற்றோர் என் மீது வைத்த நம்பிக்கைதான் என்னை உத்வேகப்படுத்துகிறது. என் பெயரும் பெயரால் தெரியும் மதமும் பலருக்கும் வித்தியாசமாகத் தெரிகிறது. நான் ஒருபெண், நான் ஒருமுஸ்லிம், நான் எடுத்த வெப் சீரிஸில் ஆணும் பெண்ணும் ஒரே வீட்டில் வசிப்பார்கள், அந்த நட்பைக் கொண்டாட பியரும் ஒயினும் இருக்கிறது என்றுசொல்வதில் எனக்கு எந்தவொரு தயக்கமும்இல்லை” எனப் பெருமையுடன் சொல்லிச் சிரிக்கிறார் யாஸ்மின்.

.