Read in English
This Article is From Mar 08, 2019

உலக பெண்கள் தினம் 2019: பெண்கள் தின நாளின் வரலாறு

International Womens Day 2019: அதன்படி ஒவ்வொரு பெண்ணும், அரசியலில் பங்கெடுத்து, கல்வி , வருமானம் மற்றும் வாழ்க்கை வன்முறை மற்றும் பாகுபாடு இன்றி வாழ வழி வகை செய்ய ஒப்புதல் அளித்தது

Advertisement
இந்தியா Translated By

International Women's Day 2019: பெண்கள் வேலை செய்வதற்கான உரிமை, தொழில்சார் பயிற்சிக்கான உரிமை, பாலின பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவர போராடினர்

New Delhi:

சர்வதேசம் மகளிர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளை கொண்டாடும் நாள் இது. பாலின சமத்துவத்தை அதிகரிக்க “நடவடிக்கைக்கான நாள்” என்று குறிப்பிடப்படுகிறது. வரலாற்று ரீதியாக சர்வதேச மகளிர் தினம் முதன் முதலில் வட அமெரிக்கவில் மற்றும் ஐரோப்பா முழுவதும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழிலாளர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு வருடமும் சர்வதேச மகளிர் தினத்தை குறிக்கும் வகையில் பல்வேறு நிகச்சிகள் நடைபெறுகின்றன.

சர்வதேச மகளிர் தினம் எப்படி உருவானது :

1909 ஆண்டில் பிப்ரவரி 28முதல் தேசிய பெண்கள் தினம் அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. நியூயார்க்கில் 1908 ஆடை உற்பத்தி தொழிலாளர்கள் மோசமான பணியிடச் சூழலை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு  மரியாதை செலுத்தும் விதமாக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. 1910 இல் கோபன்ஹாகனின் முன் முயற்சியினால் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 19 அன்று ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்த் முதன் முறையாக மார்ச் 19 கொண்டாடப்பட்டது. இதில் 1 மில்லியன் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அதில் பெண்கள் வேலை செய்வதற்கான உரிமை, தொழில்சார் பயிற்சிக்கான உரிமை, பாலின பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவர போராடினர்.

Advertisement

1913-1914 உலக மகளிர் தினம் முதல் உலகப்போரை எதிர்த்து ஐரோப்பாவில் மார்ச் 8 அன்று போராட்டம் நடத்தினர். அதில் பெண்கள் போரை எதிர்த்து பேரணி சென்று ஒற்றுமையை வெளிப்படுத்தினர். ரஷ்யாவில் பெண்கள் அமைப்பு  ‘பிரட் அண்ட் பீஸ்' ( Bread and Peace)1917 ஆண்டு  மார்ச் 8 அன்று போராட்டம் நடத்தினர். 1975 அன்று அமெரிக்காவில் உலக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.

1977 ஆம் ஆண்டு ஐ. நா பொதுச் சபை பெண்கள் உரிமைகள் மற்றும் சமாதானத்திற்கான நாளாக அறிவிக்க முன்வந்தது. பின் 1995, ஆம் ஆண்டில் பெய்ஜிங் பிரகடனத்த்தை ஏற்று 189 அரசாங்கங்கள் வரலாற்று ரீதியான முடிவில் கையொப்பமிட்டன. அதன்படி ஒவ்வொரு பெண்ணும், அரசியலில் பங்கெடுத்து, கல்வி , வருமானம் மற்றும் வாழ்க்கை வன்முறை மற்றும் பாகுபாடு இன்றி வாழ வழி வகை செய்ய ஒப்புதல் அளித்தது. உலகளவில் பெண்களை அங்கீகரிக்க ஒரு தலைமுறையினரே போராட வேண்டியிருந்தது. இந்த நாளிற்காக போராடியவர்களை நினைவு கூர்வோம். மகளிர் தினம் நல்வாழ்த்துகள்.

Advertisement

 

மேலும் படிக்க: மகளிர் தினத்தை கெளரவிக்கும் கூகுள் டூடுள்!
 

Advertisement