பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு ஆலோசணை வழங்க பேராசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
Lucknow: இணையமே தற்போதை இளைஞர்களை ஆட்சி கொண்டுள்ள நேரத்தில் அதற்கு அடிமையாகியுள்ள இளைஞர்களை மீட்க சிறப்பு மருத்துவமனைகள் லக்னோவில் அமைக்கப்படவுள்ளது.
கிங் ஜியார்ஜூ மருத்துவ பல்கலைகழகம் சார்பில் அமைக்கப்படும் இந்த மருத்துவமனைகள், இணையம் மற்றும் சமூக வலைதளங்களுக்கு அடிமையாக இருக்கும் இளைஞர்களுக்கு பல்கலைகழகத்தில் இருக்கும் உளவியல் துறை பேராசிரியர்கள் ஆலோசனை வழங்குவார்கள் என தகவல் வெளியாகிவுள்ளது.
இது பற்றி பேரிசிரியர் பி.கே தாலாலிடம் பேசியபோது ‘பேஃஸ்புக்,ட்டிவிட்டர்,இன்ஸ்டாகிராம் மற்றும் மோபையில் கேம்ஸ் போன்ற என்னற்ற பநவீன கண்டுபிடிப்புக்களை பயன்படுத்துவதால் தற்போதை இளைஞர்களுக்கு மனநோய் ஏற்பட்டுள்ளது. மேலும் பெங்களுரை சேர்ந்த நேஷ்னல் இன்ஸ்டியுட் ஆப் மென்டல் ஹெல்த் ஆன்டு நீயுரோ சையின்ஸ், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் (SHUT) எஸ்.ஹெ.ச்.யு.ட் என்னும் மருத்துவமனையை துவங்கினர். அதன் மூலம் தொழிநுட்பத்தை அதிகம் பயன்படுத்தி மனநோய்கு ஆனானவர்களுக்காகவும், இணையத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வழிகாட்டவும் இந்த மருத்துவ சேவை துவங்கப்பட்டுள்ளது. இதன் வெற்றியை தொடர்ந்து கிங் ஜியார்ஜூ மருத்துவ பல்கலைகழகம் சார்பில் இதுபோன்ற ஒரு மருத்துவனையை உருவாக்க தற்போது திட்டமிட்டுள்ளோம்' என கூறினார். மேலும் பேசிய அவர் ‘இந்த ஸ்பெஷல் மருத்துவமனைகள் மூலம் இளைய சமுதாயத்தினரை சமூக வலைதளங்களை குறைவாக எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி கற்பிக்கவுள்ளோம். பெரும்பாலும் நடுத்திர குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் என்பதால் பணிக்கு செல்லும் பெற்றோர்கள் பிள்ளைகளை கவனிக்க மறக்கிறார்கள். அதன் விளைவாக கவனசிதறல் ஏற்படுவதால் படிப்பிலும் கவனத்தை இழந்து பிள்ளைகள் எதற்கு எடுத்தாலும் கோபம் பட துவங்குவார்கள். இதை பெற்றோர்கள் கண்டித்தால் அடம் பிடக்கவோ அல்லது மறைத்து பயன்படுத்துவதோ தற்போதைய பிள்ளைகள் செய்கிறார்கள்' என பேராசிரியர் தலால் கூறினார்.
சில நாட்களுக்கு முன் லக்னோவுக்கு வந்த நேஷ்னல் இன்ஸ்டியுட் ஆப் மென்டல் ஹெல்த் ஆன்டு நீயுரோ சையின்ஸ்-யின் தலைவர் போராசிரியர் பின். கன்காதர் ‘SHUT' மருத்துவமனைகள் நாடு முழுவதும் துடங்க வேண்டும் என கூறினார்.
மேலும் இதுபோன்ற மருத்துவமனைகள் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தொடங்க வேண்டும் என்னும் இதன் மூலம் மட்டுமே சமூக வலைதளத்தின் தாக்கத்தை குறைக்க முடியும் என்பது அங்குள்ள பலரது நம்பிக்கையாவுள்ளது.