This Article is From Dec 15, 2018

என்கவுன்டர் எதிரொலி : ஜம்மு காஷ்மீரில் மொபைல் சேவை நிறுத்தம்

என்கவுன்டர் சம்பவத்தில் பொதுமக்களில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால் மாநிலத்தில் பெரும் பதற்றம் காணப்படுகிறது.

என்கவுன்டர் எதிரொலி : ஜம்மு காஷ்மீரில் மொபைல் சேவை நிறுத்தம்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Srinagar:

ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் இன்டர்நெட் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. என்கவுன்டர் சம்பவத்தில் பொதுமக்கள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்பு படையினர் என்வுன்டரில் ஈடுபட்டனர். அப்போது, துரதிருஷ்டவசமாக பொதுமக்கள் மீது துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.

என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு காஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

குறிப்பாக தெற்கு காஷ்மீர், ஸ்ரீநகர், பந்திபோரா, சோப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் முழுக்க தடையும், புத்காம், கந்தர்பெல் பகுதியில் இன்டர்நெட் வேகம் குறைக்கப்பட்டும் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

காலையில் நடந்த என்கவுன்டர் சம்பவத்தின்போது 10-க்கும் அதிகமான பொதுமக்கள் காயம் அடைந்தனர். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 

.