This Article is From Oct 12, 2018

பராமரிப்புப் பணி எதிரொலி: அடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் இணைய பயன்பாட்டில் சிக்கல்!

அடுத்த 48 மணி நேரத்துக்கு, இணையதளம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் சர்வர்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது

பராமரிப்புப் பணி எதிரொலி: அடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் இணைய பயன்பாட்டில் சிக்கல்!

இதனால், 48 மணி நேரத்துக்கு உலக அளவில் இணையத்தை பயன்படுத்துவது சிக்கலானதாக இருக்கலாம். (கோப்புப் படம்)

New Delhi:

அடுத்த 48 மணி நேரத்துக்கு, இணையதளம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் சர்வர்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால், 48 மணி நேரத்துக்கு உலக அளவில் இணையத்தை பயன்படுத்துவது சிக்கலானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இணைய முடக்கம் குறித்து, ரஷ்யா டுடே செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

இணையதளத்தை நிர்வகிக்கும் அமைப்புகளில் ஒன்றான ஐசிஏஎன்என், சர்வர்களில் இருக்கும் க்ரிப்டோகிராஃபிக் கீ-யை மாற்றும் என்று சொல்லப்படுகிறது. இந்த கீ தான், இணையத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் கருவியாக செயல்படுகிறது. 

தொடர்ச்சியாக உலக அளவில் சைபர் க்ரைம்கள் அதிகமாக நடந்து வரும் நிலையில் ஐசிஏஎன்என், இந்த நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த பராமரிப்பு செயல் குறித்து தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான சிஆர்ஏ, ‘இந்த பராமரிப்பு பணி என்பது உலக அளவில் இணையத்தை பாதுகாப்பாக வைத்திருக்க மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த பராமரிப்புப் பணி மூலம், உலக அளவில் பல பயனர்களின், இணையதள சேவை முடங்க வாய்ப்புள்ளது. 

பயனர்களுக்கு, இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பாதிப்பு அதிகமாக இருக்கும்’ என்று அறிக்கை மூலம் தெளிவு படுத்தியுள்ளது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.