Read in English
This Article is From Dec 13, 2018

சிபிஐ கொடுத்த அழுத்தம்: சோக்சிக்கு எதிராக இன்டர்போல் வாரன்ட்!

13,000 கோடி ரூபாய் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபரான மெஹுல் சோக்சிக்கு எதிராக சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல், ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

Advertisement
இந்தியா ,

மும்பை நீதிமன்றத்தில், சோக்சிக்கு எதிராக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ, வழக்கு தொடர்ந்துள்ளது

Highlights

  • சோக்சிக்கு எதிராக இன்டர்போல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
  • சோக்சி சாட்சியம் கொடுக்கும் நிலையில் இல்லை எனத் தகவல்
  • நிரவ் மோடி, சோக்சி, ரூ.13000 கோடி வழக்கில் தேடப்பட்டு வருகிறார்
New Delhi:

13,000 கோடி ரூபாய் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபரான மெஹுல் சோக்சிக்கு எதிராக சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல், ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மும்பை நீதிமன்றத்தில், சோக்சிக்கு எதிராக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ, வழக்கு தொடர்ந்திருந்தது. இதையடுத்து சோக்சியின் வழக்கறிஞர், ‘சோக்சியின் உடல்நிலை தற்போது சரியில்லை. அவரால் வழக்கு குறித்து சாட்சியம் அளிக்கக் கூடிய சூழல் இல்லை. அவரது உடல்நிலை சரியாகும் பட்சத்தில் பார்க்கலாம்' என்றுள்ளார்.

பஞ்சாப் தேசிய வங்கியிடமிருந்து 13,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தார் சிலரை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தேடி வருகிறது. நிரவ் மோடியுடன் தேடப்பட்டு வரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் சோக்சியும் ஒருவர். 2011 ஆம் ஆண்டு முதல் பிஎன்பி வங்கியிடமிருந்து நிரவ் மோடி குடும்பம் கடன் பெற்று மோசடி செய்துள்ளது.

அவர்கள் மோசடியில் ஈடுபட்ட விஷயம் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் தெரியவந்தது. அதன் பின்னர், சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் புகார் கொடுத்தது பிஎன்பி. ஆனால், அவர்களை கைது செய்து விசாரிப்பதற்கு முன்னரே குடும்பத்தோடு இந்தியாவிலிருந்து தப்பியோடி விட்டனர். அதன் பிறகு நிரவ் மோடி மற்றும் சோக்சி உள்ளிட்டவர்களின் பாஸ்போர்டுகளையும் இந்திய அரசு முடக்கவிட்டது.

Advertisement
Advertisement