New Delhi: பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடந்த மோசடி தொடர்பாக, நீரவ் மோடியின் தங்கை புர்வி தீபக் மீது ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கியுள்ளது இன்டர்போல்.
13,500 கோடி ரூபாய் கடன் மோசடியில், புர்விக்கு தொடர்பு இருப்பதாகவும், அவருக்கு இதன் மூலம் 950 கோடி ரூபாய் ஆதாயம் கிடைத்ததாகவும் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், புர்வி பல ஷெல் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மோசடி செய்த தொகையில் 500 கோடி ரூபாயை ஷெல் நிறுவனங்களில் புர்வி முதலீடு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இன்ட்ரபோலின் அந்த ரெட் கார்னர் நோட்டீஸில், 44 வயது புர்வி தீபக், பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர் என்றும், அவர் தேடப்படும் குற்றவாளி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.