This Article is From Oct 06, 2018

‘இன்டர்போல்‘ தலைவர் மெங் ஹாங்வேயை கைது செய்த சீனா

இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் தலைவர் மெங் ஹாங்வேயை, அவர் சீனா வந்திறங்கியதும் ஒழுங்குமுறை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக ஹாங்காங் செய்தித்தாள் கூறியுள்ளது

‘இன்டர்போல்‘ தலைவர் மெங் ஹாங்வேயை கைது செய்த சீனா

இன்டர்போல் அமைப்பின் தலைவர் மெங் ஹாங்வே

Beijing:

உலகில் 192 நாடுகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச போலீஸ் எனப்படும் இன்டர்போல் அமைப்பு செயல்பட்டு வருகிறது. சர்வதேச நாடுகளுக்கிடையே குற்றவாளிகளை பிடிக்கும் பணியின்போது இன்டர்போல் உதவி செய்யும். இதன் தலைமை அலுவலகம் பிரான்சின் லியோன் நகரில் அமைந்துள்ளது.

இதன் தலைவராக கடந்த 2016-ல் சீனாவை சேர்ந்த மெங் ஹாங்வே நியமிக்கப்பட்டார். அவர் அந்தப் பதவியில் வரும் 2020 வரை நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி பிரான்சில் இருந்த அவர் அதற்கு பின்னர் மாயமானார்.

இந்த நிலையில் அவர் கடந்த வாரம் சீனாவில் விமான நிலையத்தில் வந்திறங்கியதாகவும், அங்கு விசாரணை நடத்திய அதிகாரிகள் பின்னர் அவரை கைது செய்ததாகவும் ஹாங்காங் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர் எதற்காக கைது செய்யப்பட்டார், அவரிடம் எதுபற்றி விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்த தகவல்கள் ஏதும் தெரியவரவில்லை.

முன்னதாக மெங் காணாமல் போனதை தொடர்ந்து அவர் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் சீனாவிலும், பிரான்சிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.