This Article is From Mar 09, 2019

21 தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களுடன் நேர்காணல்!

21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

Advertisement
தமிழ்நாடு Written by

மக்களவைத் தேர்தலுடன் எந்த நேரத்திலும் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இந்த நிலையில் இந்த தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கான நேர்காணல் துவங்கியது.

மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் இன்னும் ஓரிரு தினங்களில் துவங்க உள்ள நிலையில், 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.

திமுக சார்பில், மக்களவை தேர்தல், 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம், கடந்த 1ம் தேதி முதல், விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டன. நேற்று முன் தினம், இறுதி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாவட்ட செயலர்கள் வேண்டுகோளை ஏற்று நேற்று ஒரு நாள் மட்டும், கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்ட்டது.

Advertisement

இதைத்தொடர்ந்து, விருப்ப மனு அளித்தவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் நேர்காணல் நடத்துகின்றனர். இன்று ஒரே நாளில் 21 தொகுதிகளுக்கும் நேர்காணலை நடத்தி முடிக்க திமுக திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, மக்களவைத் தேர்தலில் திமுகவில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்த பேச்சுவார்த்தையும் தற்போது தொடங்கியுள்ளது.

Advertisement
Advertisement