This Article is From Aug 22, 2019

சிபிஐ, தனிப்பகை தீர்க்கும் அமைப்பாக உள்ளது: கொதிகொதிக்கும் காங்கிரஸ்!

INX Media Case: “நாங்கள் எல்லோரும் வழக்கை எதிர்கொள்ளத்தான் விரும்புகிறோம். யாரும் எங்கும் ஓடி ஒளிந்து விடவில்லைr"- சிதம்பரம்

சிபிஐ, தனிப்பகை தீர்க்கும் அமைப்பாக உள்ளது: கொதிகொதிக்கும் காங்கிரஸ்!

தெற்கு டெல்லியில் இருக்கும் தனது இல்லத்தில் நேற்றிரவு பரபரப்பான சூழலில் கைது செய்யப்பட்டார் ப.சிதம்பரம்.

New Delhi:

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ், “சிபிஐ அமைப்பு என்பது, தனிப்பட்ட பகைகளை தீர்க்கும் அமைப்பாக மாறியுள்ளது” என்று கொதித்துள்ளது. 

“9 ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 11 ஆண்டுகளுக்குப் பின்னர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இது சிபிஐ அமைப்பால் நிகழ்த்தப்பட்டுள்ளது. சிபிஐ, அரசின் தனிப்பட்ட பகைகளைத் தீர்த்துக் கொள்ளும் அமைப்பாக மாறியுள்ளது. இந்தியா, ஜனநாயகப் படுகொலையை நேற்றுப் பார்த்தது” என்று டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா காட்டமாக பேசியுள்ளார். 

தெற்கு டெல்லியில் இருக்கும் தனது இல்லத்தில் நேற்றிரவு பரபரப்பான சூழலில் கைது செய்யப்பட்டார் ப.சிதம்பரம். டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அவர் நேற்றிரவைக் கழித்தார். வழக்கு தொடர்பான விசாரணை இன்று காலை சிதம்பரத்திடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலைக்குள் சிபிஐ, அவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் என்று தெரிகிறது. நீதிமன்றத்தில் சிபிஐ, சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்கும் என சொல்லப்படுகிறது. 
 

f6icjvvo

நேற்றிரவு சிபிஐ அதிகாரிகள், சிதம்பரத்தைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சிதம்பரம் கைது செய்யப்பட்டார் என்று தகவல் தெரிந்த வட்டாரம் NDTV-யிடம் கூறியுள்ளது. 

நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சிதம்பரம், “நாங்கள் எல்லோரும் வழக்கை எதிர்கொள்ளத்தான் விரும்புகிறோம். யாரும் எங்கும் ஓடி ஒளிந்து விடவில்லை. சட்டத்திலிருந்து நான் ஒளிந்து கொள்வதாக குற்றம் சாட்டப்படுவதை மறுக்கிறேன். நீதியின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். தெளிவான தீர்க்கமான பார்வையுடன் என் மீதான விமர்சனங்களை எதிர்கொள்வேன். விசாரணை அமைப்புகள் சட்டத்தின்படி செயல்படும் என்று நம்புகிறேன். இதற்காக பிரார்த்தனையும் செய்து கொள்கிறேன்.” எனத் தெரிவித்தார்.

.