INX Media Case: “வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்தால் ஆதாரங்களைக் கலைக்க முடியாது என்றாலும், சாட்சிகளிடம் தாக்கம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது”
New Delhi: ஐ.என்.எக்ஸ் மீடீயா வழக்கில் (INX Media Case) குற்றம் சாட்டப்பட்டு, டெல்லி திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் இருக்கும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் (P Chidambaram), சிறையிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி பிணை கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் (Delhi High Court) முறையிட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு பிணை கொடுக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
ஜாமீன் கொடுக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், “வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்தால் ஆதாரங்களைக் கலைக்க முடியாது என்றாலும், சாட்சிகளிடம் தாக்கம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளது. சுமார் ஒரு மாதமாக ப.சிதம்பரம், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.