INX Media Case - சிதம்பரம், 105 நாட்களாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியே வருகிறார்.
New Delhi: ஐ.என்.எக்ஸ் மீடியா பணமோசடி வழக்கில் (INX Media Case) கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்குப் (P Chidambaram) பிணை கொடுத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
சிதம்பரம், 105 நாட்களாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியே வருகிறார்.
பிணை கொடுத்த உச்ச நீதிமன்றம், சிதம்பரம், நாட்டை விட்டு வேறு எங்கும் செல்லக் கூடாது என்றும், எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தந்தையின் பிணை குறித்து அவரது மகன் கார்த்தி சிதம்பரம், “ஒருவழியாக 106 நாட்களுக்குப் பின்னர் பிணை கிடைத்துள்ளது,” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சிதம்பரத்தின் பிணை மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த நவம்பர் 28-ல், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. முன்னதாக டெல்லி உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை தொடர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், சிதம்பரத்துக்குப் பிணை கொடுக்க மறுத்துவிட்டது.
பிணை விசாரணையின்போது அமலாக்கத் துறை, “கஸ்டடியில் இருக்கும் போதும் சிதம்பரத்தால் வழக்கின் முக்கிய சாட்சியங்களிடம் தாக்கம் ஏற்படுத்த முடியும்,” என்று குற்றம் சாட்டியது. அதற்குச் சிதம்பரம், “ஆதராமற்ற வாதங்கள் மூலம் சமூகத்தில் எனக்கிருக்கும் நன்மதிப்பையும் பொது வாழ்க்கையையும் சிதைத்துவிட முடியாது,” என்றார்.