This Article is From Sep 26, 2019

'திறமையான தலைவர்களை மத்திய பாஜக அரசு குறி வைக்கிறது' - கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை அவரது மகன் கார்த்தி சிதம்பரம் இன்று சந்தித்து பேசினார்.

'திறமையான தலைவர்களை மத்திய பாஜக அரசு குறி வைக்கிறது' - கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!!

ப.சிதம்பரத்தின் ட்விட்டர் பக்கத்தை அவரது குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர்.

New Delhi:

திறமையான தலைவர்களையும், தங்களை கடுமையாக எதிர்ப்பவர்களையும் மத்திய பாஜக அரசு குறி வைப்பதாக சிவகங்கை தொகுதியின் எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். 

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

ஏற்கனவே பலமுறை சந்தித்திருந்த நிலையில், சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை தொகுதியின் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் தனது தந்தையை திகார் சிறையில் இன்று சந்தித்து பேசினார். 

இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

பழிவாங்கும் அரசியலைத்தான் மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்து வருகிறது. எனது தந்தையும், கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமாரும் நீதிமன்ற விசாரணையை சந்திக்கவில்லை. அவர்கள் மீது குற்றச்சாட்டுதான் உள்ளதே தவிர, அது எந்த நீதிமன்றத்தாலும் நிரூபிக்கப்படவில்லை. விசாரணையின் முகாந்திரத்தை கருதி நீதிமன்ற சிறையில் அடைத்திருக்கிறார்கள். 

திறமை மிக்க தலைவர்களையும், தங்களை கடுமையாக எதிர்ப்பவர்களையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து குறி வைக்கிறது. அவர்கள் மீது திட்டமிட்டு பொய்யான வழக்குகள் போடப்படுகின்றன. 

இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். ஐ.என்.எக்ஸ். மீடியா விவகாரத்தில் முன்னாள் நிதியைமச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 3-ம்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

.