This Article is From Mar 14, 2019

வில் அம்பு தாக்குதலில் இருந்து காப்பாற்றிய ஐபோன்!

வீட்டிற்குள் இருந்து பாய்ந்து வந்த அம்பு ஒன்று சாலையில் சென்றவரின் ஐபோனை துளைத்ததில் அவரின் கையில் இருந்த போன் லேசாக அவரது கன்னத்தில் இடித்ததாக கூறப்படுகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

வில் அம்பு தாக்குதலில் இருந்து காப்பாற்றிய ஐபோன்!

அம்பால் துளைக்கப்பட்ட ஐபோன் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் நீயூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னை நோக்கி பாய்ந்து வந்த ஒரு அம்பை தனது மொபைல் போன் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து நீயூ சவுத் வேல்ஸ் போலீசார் கூறும்போது, 43 வயது மதிப்பிலான அந்த நபர் தாக்குதலுக்கு ஆளான போது, அவரது கையில் இருந்த ஐபோனால் சிறு கீறல் காயத்துடன் தப்பியுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று காலை 9 மணி அளவில் நடைபெற்றுள்ளது. அப்போது, வீட்டிற்கு வெளியே சென்று கொண்டிருந்த நபர் மீது அம்பை விட்டுள்ளார். அந்த சமயம், அந்த நபர் தனது ஐபோனால், படம் பிடிக்க முயன்றுள்ளார். அப்போது, அவர் விட்ட அம்பு ஐபோனை துளைத்துள்ளது.

 

 
 

அப்படி அம்பு ஐபோன் துளைத்ததில் அவரின் கையில் இருந்த போன் லேசாக அவரது கன்னத்தில் இடித்ததாக கூறப்படுகிறது. இதில் லேசான கீறல் காயம் மட்டும் ஏற்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இது சம்மந்தமான 2 புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, தாக்குதல் நடத்திய 39 வயதிலான நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது, குற்றச்செயலில் ஈடுபடுவதற்காக கையில் ஆயுதம் ஏந்தியது, சேதத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யதுள்ளனர்.
 

 

Click for more trending news


.