This Article is From Jan 10, 2020

காரிலிருந்து தவறி விழுந்த குழந்தை : பதற வைக்கும் வீடியோ

குழந்தை பயணித்த காரும் உடனடியாக நிறுத்தப்பட்டு ஓடோடி வந்து குழந்தையினை அழைத்து செல்கிறார்கள்.

காரிலிருந்து தவறி விழுந்த குழந்தை : பதற வைக்கும் வீடியோ

ஓடும் காரிலிருந்து தவறி விழுந்த குழந்தை.

ஐபிஎஸ் அதிகாரி பங்கஜ் நெய்ன் ட்விட்டரில் வீடியோவை பகிர்ந்துள்ளார். குழந்தைகளுடன் பயணம் செய்யும் போது காரில் பாதுகாப்புக்கான லாக் எத்தனை அவசியம் என்பதையும் குழந்தைகளுக்கான இருக்கைகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. வீடியோவில் பரபரப்பான சாலையில் காரிலிருந்து குழந்தை விழுந்தது. நல்வாய்ப்பாக குழந்தை தப்பித்துக் கொண்டது. 

டிசம்பர் 26 அன்று யூ ட்யூப்பில் முதன்முதலில் வெளியிடப்பட்டது. இந்த காட்சிகள் கேரளாவில் கண்காணிப்பு கேமராக்களால் படம் பிடிக்கப்பட்டது. வளைவான சாலையில் கார் வேகமாக சென்றபோது குழந்தை தவறி விழுகிறது. நல்வாய்ப்பாக சாலையில் உள்ள அனைத்து வாகனங்களும் குழந்தையை பார்த்ததும் நிறுத்தி விடுகிறார்கள். மேலும் விபத்துகள் எதுவும் ஏற்படவுமில்லை. 

குழந்தை பயணித்த காரும் உடனடியாக நிறுத்தப்பட்டு ஓடோடி வந்து குழந்தையினை அழைத்து செல்கிறார்கள். 

இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்ட பின்னர் 6,000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டது. பலரும் விதவிதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 

ட்விட்டரில் வீடியோவை பகிர்ந்து கொள்ளும் போது “குழந்தைகளுடன் பயணம் செய்யும் போது பாதுகாப்புக்கான லாக் மற்றும் குழந்தைகளுக்கான இருக்கைகள் மிகவும் அவசியம்” என்று எச்சரித்தார். “எல்லா கதவுகளும் சரியாக மூடப்பட்டிருக்கிறதா என்று சரிபார்க்கவும். எல்லா குழந்தைகளுக்கும் இதைப்போன்ற நல்வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

Click for more trending news


.