Read in English
This Article is From Jan 11, 2020

Iran தளபதியைக் கொன்றதற்கான காரணம் என்ன..?- முதல்முறையாக பின்னணியை விவரிக்கும் அதிபர் Trump!!

Iran - US Conflict: அனைத்துப் பிரச்னைகளுக்கும் தொடக்கப் புள்ளியாக இருந்த ஈரான் தளபதி கொலை பற்றி ட்ரம்ப்...

Advertisement
உலகம் Edited by

Iran - US Conflict: “அமெரிக்காவின் 4 தூதரகங்கள் மீது சுலைமானி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார் என்று நாங்கள் கருதினோம்"

Washington:

Iran - US Conflict: அமெரிக்கா ஈரான் இடையிலான போர்ப் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக ஈரான் நாட்டு ராணுவத் தளபதி காசெம் சுலைமானியை யாரும் எதிர்பாராத விதமாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் உத்தரவின் பேரில் கொன்றது அந்நாட்டு ராணுவம். அதைத் தொடர்ந்து ஈரான், ஈராக்கிலிருந்த அமெரிக்க ராணுவத முகாம்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் நடந்த அதே நாளில், ஈரானிலிருந்து உக்ரைனுக்கு சென்று கொண்டிருந்த உக்ரைனின் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 176 பேரும் மரணமடைந்தார்கள்.

உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில் ஈரானின் பங்கு இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது. அதிபர் ட்ரம்ப் மட்டுமல்லாமல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடும், “உக்ரை விமான விபத்துக்கு ஈரான் காரணமாக இருக்கலாமோ என்று சந்தேகம் உள்ளது,” எனறார். இன்று யாரும் எதிர்பாராத வகையில் ஈரான், “உக்ரைன் விமானத்தைத் தவறுதலாக நாங்கள்தான் சுட்டு வீழ்த்திவிட்டோம்,” என்று பகீர் கிளப்பும் விளக்கத்தைக் கொடுத்தது. இதனால் பிரச்னை பூதாகரமாகியுள்ளது.

இந்நிலையில் இந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் தொடக்கப் புள்ளியாக இருந்த ஈரான் தளபதி கொலை பற்றி ட்ரம்ப், “அமெரிக்காவின் 4 தூதரகங்கள் மீது சுலைமானி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார் என்று நாங்கள் கருதினோம். பாக்தாத்தில் இருக்கும் தூதுரகத்தின் மீதும் சுலைமானியின் வழிகாட்டுதல்படி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம்,” என்று ஃபாக்ஸ் செய்திக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

Advertisement

அதிபர் ட்ரம்புக்கு உள்நாட்டிலேயே ஏகப்பட்ட பிரச்னைகள் எழுந்துள்ளன. அவரை அதிபர் பதவியிலிருந்து நீக்க நாட்டின் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் கொடுத்துள்ளது. அடுத்ததாக செனட் சபையிலும் இது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. 2020 ஆம் ஆண்டில் மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தல் வரவுள்ள நிலையில், அதில் குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்ப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். குடியரசுக் கட்சிக்கு உள்ளேயும், ஜனநாயகக் கட்சி சார்பிலும் ட்ரம்புக்கு தேர்தல் களத்தில் மிகப் பெரிய போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில், அவரின் ‘அதிரடி தாக்குதல்' உத்தரவை அமெரிக்க அதிகாரிகள் ஏன் செயல்படுத்தினார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Advertisement