Read in English
This Article is From Aug 01, 2018

பேச்சுவார்த்தைக்கு இறங்கிவந்த ட்ரம்ப்… நிராகரித்த ஈரான்… முற்றும் மோதல்!

ஈரான் - அமெரிக்கா இடையில் வர்த்தகப் போர் உச்சம் பெற்றுள்ளது

Advertisement
உலகம்
LONDON :

ஈரான் - அமெரிக்கா இடையில் வர்த்தகப் போர் உச்சம் பெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘ஈரானுடனான பேச்சுவார்த்தைக்குத் தயார்’ என்று கூறினார். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையை நிராகரித்துள்ளது ஈரான். 

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கடந்த 2105 ஆம் ஆண்டு கையெழுத்தாகி இருந்த ‘அணுசக்தி ஒப்பந்த்தத்தில்’ இருந்து அமெரிக்கா பின்வாங்கியது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் தான் இந்த பின்வாங்கல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ட்ரம்ப், ‘அணு சக்தி ஒப்பந்தம் ஒருதலைபட்சமாக இருக்கிறது’ என்று குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்து இரு நாட்டுக்கும் இடையில் வர்த்தகப் போர் தொடங்கியது. 

‘ஈரானிடமிருந்து யாரும் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது. வரும் நவம்பர் மாதத்துடன் எங்கள் நட்பு நாடுகள் அனைத்தும் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் எங்கள் நடவடிக்கைக்கு ஆளாக வேண்டும்’ என்று அமெரிக்கா தனது நட்பு நாடுகளை எச்சரித்துள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இந்தியா, ஈரான் மற்றும் அமெரிக்காவுடன் நட்புடன் இருந்து வருகிறது. மேலும், ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது இந்தியா.

Advertisement

ஆனால், கடந்த திங்கள் கிழமை திடீரென்று ட்ரம்ப், ‘நிபந்தனையற்று ஈரான் இறங்கிவந்தால் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம்’ என்று தெரிவித்தார். ஆனால், இதற்கு ஈரானின் அரசு தரப்பு அதிகாரிகள், ‘ட்ரம்ப் சொல்வது கனவில் தான் நடக்கும்’ என்று பேச்சுவார்த்தையை நிராகரித்துள்ளனர். 

இது குறித்து ஈரான் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஜரீஃப், ‘ஈரானுடனான உறவைத் துண்டித்துக் கொண்டது குறித்து அமெரிக்கா, தன்னைத் தானே நொந்து கொள்ள வேண்டும். எங்கள் நாட்டு மீது வரிகள் விதிப்பது, மிரட்டுவதெல்லாம் வேலைக்கு ஆகாது’ என்று ட்விட்டரில் கொதித்துள்ளார்.

Advertisement

அதேபோல வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் பாரம் கோஸ்மி, ‘எங்கள் மீது அழுத்தம் போடுவதோ, வரிகள் விதிப்பதோ பேச்சுவார்த்தைக்கும் சுமூக நடவடிக்கைகளுக்கும் எதிராக செயல்படும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளால், அந்நாட்டு எதிர்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைந்துள்ளன. ஒருபக்கம் இப்படி அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் ஒன்று திரண்டு வரும் நிலையில், டாலருக்கு எதிரான அந்நாட்டு பணமான ரியாலின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement