அரசு தொலைக்காட்சியில் வாசித்த அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (AFP file)
ஹைலைட்ஸ்
- "Spies were employed in sensitive and vital private sector centres": Iran
- Announcement comes after three months of confrontation with the West
- Last week Iran captured a British tanker in the Strait of Hormuz
Dubai: அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பில் பணிபுரியும் 17 உளவாளிகளை ஈரான் கைது செய்துள்ளது. மேலும் சிலருக்கு மரண தண்டனை விதித்துள்ளது என்று ஈரான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புலனாய்வ அமைச்சகம் கொடுத்த தகவலின் படி சிஐஏ உளவு வளையத்தை உடைத்து சந்தேகத்துக்கு உரிய 17 நபர்களை கைது செய்துள்ளதாக கூறுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்று ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“அடையாளம் காணப்பட்ட உளவாளிகள், பொருளாதார, அணுசக்தி, உள்கட்டமைப்பு, ராணுவம் மற்றும் இணைய பகுதிகளில் முக்கியமான மற்றும் தனியார் துறை மையங்களில் பணியாற்றினர் அங்கு அவர்கள் இரகசிய தகவல்களை சேகரித்தனர்” என்று அரசு தொலைக்காட்சியில் வாசித்த அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் ஈரான் சிஐஏ பெரிய இணைய உளவு வலையமைப்பை அம்பலப்படுத்தியதாகவும், இதன் விளைவாக பல அமெரிக்க உளவாளிகள் பல்வேறு நாடுகளில் கைது செய்யப்பட்டதாகவும் ஈரான் கூறியுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)