This Article is From Nov 26, 2018

'ஒயின்’ சுவைக்கும் போது வெளியேற்றப்பட்ட நபர்... என்ன செய்தார் தெரியுமா..?

விருந்தை நடத்திய ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்பூ பல்பொருள் அங்காடியின் மேல் சுமார் 1.7 மில்லியன் இயான்களை நஷ்ட ஈடாக கேட்டிருந்தார்.

'ஒயின்’ சுவைக்கும் போது வெளியேற்றப்பட்ட நபர்... என்ன செய்தார் தெரியுமா..?

‘ஒயின்’ பருக அனுமதிக்கவில்லை என்ற காரணத்துக்காக வழக்கு தொடர்ந்த மனியதர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் உள்ள செய்பூ பல்பொருள் அங்காடி நடத்திய ‘ஒயின்' சுவைக்கும் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலே வெளியேற்றியதால் மாற்றுத்திறனாளி ஒருவர் நிகழ்ச்சி நடத்துவோர் மீது நஷ்டஈடு வழக்கு தொடர்ந்துள்ளார்.
 

‘ஒயின்' சுவைக்கும் நிகழ்ச்சியின்போது பாதுகாப்பு காரணங்களுக்காக எனக் கூறி அவரை இரண்டு கிளாஸ் ஒயின்களுக்கு மேல் பருக அனுமதிக்கவில்லை என்ற காரணத்துக்காக  அம்மனிதர் டோக்கியோ நீதிமன்றத்தில் அவரின் உடல்குறையை வைத்து தன்மீது பாகுபாடு செய்ததாக மனு அளித்தார். 


மேலும், அந்த மனுவில் இந்த விருந்தை நடத்திய ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்பூ பல்பொருள் அங்காடியின் மேல் சுமார் 1.7 மில்லியன் இயான்களை (10,63192.17 ரூபாய்) நஷ்ட ஈடாக கேட்டிருந்தார்.நீதிமன்றத்தில் முதல் கட்ட வாதம் நடந்த நிலையில் அங்காடி சார்பாக ஆஜர் ஆகிய வழக்கறிஞர் கடைகளில் இதற்கு முன்னர் மது அருந்திவிட்டு சில நபர்கள் கடைக்குள் விபத்து ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த மனுதாரரின் வழக்கறிஞர் கூறுகையில் விபத்துக்கள் சக்கர நாற்காலியை பயன்படுத்துபவர்களால் (அதாவது மாற்றுத்திறனாளிகளால்) மட்டுமே விபத்துக்கள் நடப்பதில்லை என்று வாதிட்டார். மேலும், தனது கட்சிகாரர்ரை தொல்லையாக கருதியதாக முறையிட்டார். 


மேலும் ஜப்பானை பொறுத்தவரை தானாகவோ அல்லது ஆட்டோமெட்டிக்காகவோ செயல்படும் சக்கர நாற்காலியை குடித்துவிட்டு உபயோகப்படுத்துவதற்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

Click for more trending news


.