This Article is From Oct 16, 2019

“Bigil திரைப்படத்திற்கு எதிராக அதிமுக ஸ்கெட்ச் போடுதா..?”- தமிழக அமைச்சர் பதில்!

Bigil Movie issue- சமீபத்தில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிமுகவைச் சேர்ந்த பலர் இவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

“Bigil திரைப்படத்திற்கு எதிராக அதிமுக ஸ்கெட்ச் போடுதா..?”- தமிழக அமைச்சர் பதில்!

Bigil Movie issue- ‘தலைவா' படத்தில் இருந்து விஜய் படங்களுக்கு தொடர்ந்து பல எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் ஏற்பட்டு வருகின்றன.

வரும் தீபாவளிக்கு நடிகர் விஜய்யின் (Vijay) ‘பிகில்' (Bigil) திரைப்படம் வெளியாக இருக்கிறது. அந்தப் படத்தை வெளியிட தடை கோரி தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தமிழக ஆளுங்கட்சியான அதிமுக-வுக்கும் (ADMK) விஜய்க்கும் இருக்கும் பிரச்னையால், இது அக்கட்சியின் தூண்டுதலால் போடப்பட்ட வழக்கோ என்று பலர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். அது குறித்து தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். 

விஜய், நயன்தாரா, யோகி பாபு, கதிர், விவேக், ஜாக்கி ஷெராஃப், ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் பிகில். தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய்யை வைத்து மூன்றாவது முறையாக படத்தை இயக்கி இருக்கிறார் அட்லி.

‘தலைவா' படத்தில் இருந்து விஜய் படங்களுக்கு தொடர்ந்து பல எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசியல் குறித்த விமர்சனங்கள் விஜய் படங்களில் இடம் பெறுவதால் இந்த எதிர்ப்பு இருப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டது. மேலும் கதைத் திருட்டு என்பது தமிழ் சினிமாவில் தொடர்ந்த நடைபெற்று வரும் இன்னொரு பெரும் பிரச்னையாக இருக்கிறது. பல்வேறு திரைப்படங்களுக்குக் கதை திருட்டு வழக்கு வழக்காடு மன்றம் சென்று திரும்புவதை அதிகம் பார்க்க முடிகிறது.

943pgn28



சமீபத்தில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிமுகவைச் சேர்ந்த பலர் இவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள நிலையில் இயக்குனர் கே.பி.செல்வா என்பவர், தன்னுடைய கதையை திருடி பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், படத்திற்கு தடை கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த தொடர் சர்ச்சைகள் குறித்தும், பிகில் பட பிரச்னைக்குப் பின்னர் அதிமுக-தான் இருக்கிறதா என்பது குறித்தும் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, “விஜய் எங்களைப் பற்றி ஜனநாயகபூர்வமாக ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். நாங்களும் அதற்கு ஜனநாயகப் பூர்வமாக எதிர்வினை ஆற்றியிருந்தோம். அவ்வளவுதான். அந்தப் பிரச்னை முடிந்தது. தற்போது அவரது படத்துக்கு எதிராக நாங்கள்தான் செயல்படுகிறோம் என்பதெல்லாம் முழுவதும் வதந்தி. அதற்கான அவசியம் எங்களுக்கு இல்லை” என்று முடித்துக் கொண்டார். 

dm9cgqvg


 

.