This Article is From May 18, 2020

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை திட்டமிட்டு குறைக்கப்படுகிறதா?- தரவுகளோடு விமர்சித்த ஸ்டாலின்!!

"பரிசோதனைகள் ஏன் 40 சதவீதம் அறவிற்கு குறைப்பட்டிருக்கின்றன?"

Advertisement
தமிழ்நாடு Written by

"பரிசோதனை செய்யாமல் கொரோனா நோய்ப் பரவல் இல்லை என்று சொல்லிக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது"

Highlights

  • தமிழகத்தில் கொரோனா பரிசோதனை குறைக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் விமர்சனம்
  • 40 சதவீத கொரோனா பரிசோதனை குறைக்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின்
  • பரிசோதனைக் குறைப்பு பேராபத்தில் முடியும்: ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழக அளவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாநில எதிர்க்கட்சியான திமுக, ஒரு பரபரப்புக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தமிழக அரசு கொரோனா பரிசோதனையை வேண்டுமென்றே குறைத்து வருகிறது' என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். 

இது குறித்து ஸ்டாலின், ‘தமிழகத்தில் மே 7 ஆம் தேதி செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 14,102. இது படிப்படியாகக் குறைக்கப்பட்டு மே 16 இல் வெறும் 8,270 பரிசோதனைகளே செய்யப்பட்டுள்ளன.

பரிசோதனைகள் ஏன் 40 சதவீதம் அறவிற்கு குறைப்பட்டிருக்கின்றன? பரிசோதனைகளைக் குறைத்து நோய்த் தொற்று குறைகிறது அல்லது நோய்த் தொற்றே இல்லை என்று போலியாக காட்ட நினைக்கிறதா தமிழக அரசு?

Advertisement

மதுக் கடைகளைத் திறப்பதற்காக, மற்ற அனைத்துக் கடைகளையும் திறந்து கொரோனாவே இல்லை என்ற தோற்றத்தை சில நாட்களாக உருவாக்கிக் கொண்டிருந்தவர்கள் பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் குறைத்து விட்டார்கள். 

பரிசோதனை செய்யாமல் கொரோனா நோய்ப் பரவல் இல்லை என்று சொல்லிக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது. ஆபத்தை மறைக்க மறைக்க, அது பேராபாத்தாக மாறும்,' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

  .  


 

Advertisement