This Article is From Feb 22, 2019

தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கிறதா அமமுக? டிடிவி தினகரன் விளக்கம்

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கிறதா அமமுக? டிடிவி தினகரன் விளக்கம்

அதிமுக – பாமக – பாஜக கூட்டணி நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுடன் பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

எனினும் தொகுதி பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜகவுக்கு ஒதுக்கியது போக மீதம் 28 தொகுதிகள் இருக்கின்றன. இதனிடையே, அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரசுக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் தேமுதிகவை கூட்டணிக்கு இழுப்பதில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்ததித்த டிடிவி தினகரனிடன் கேள்வி எழுப்பியபோது,

யாரும் விமர்சிக்காத அளவுக்கு அமமுக கூட்டணி அமைக்கும், எத்தனை கட்சிகளை அதிமுக சேர்த்தாலும் மக்கள் ஓட்டு போடமாட்டார்கள். தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை, மக்களால் விமர்சிக்கப்படாத கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். பாமகவுக்கு எந்த நிலைப்பாடோ அதே நிலைப்பாடு தேமுதிகவுக்கும் தான். ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உடன் ஒரு போதும் கூட்டணி கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.


 

.