This Article is From Dec 11, 2018

கஜா புயலை அடுத்து தொற்று நோய் அச்சமா..?

ஒட்டு மொத்தமாக உள் நோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவிகிதம் குறைந்துள்ளது. குறிப்பாக, டெங்கு முழுவதுமாக ஒரு கட்டுக்குள் வந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

கஜா புயலை அடுத்து தொற்று நோய் அச்சமா..?

சென்ற மாதம் தமிழகத்தைத் தாக்கிய கஜா புயலால், நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டன. 110 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியதால், 11 லட்சம் மரங்கள், 3 லட்சத்துக்கும் மேலான வீடுகள் சேதமடைந்தன. அதேபோல நூற்றுக்கணக்கான படகுகளும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மின் கம்பங்களும் பாதிக்குப்புக்கு உள்ளாகின.

இதற்கு தமிழக அரசு, மத்திய அரசிடம் நிவாரணமாக 15,000 கோடி ரூபாய் கேட்டுள்ளது. ஆனால், இதுவரை 350 கோடி ரூபாய் மட்டுமே நிவாரணத் தொகை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கஜா புயல் பாதித்த இடங்களில் தொற்று நோய் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘கஜா புயலை அடுத்து, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 1.15 லட்சம் நபர்கள், கஜா புயலை அடுத்து தங்களை சோதனை செய்து கொண்டனர். அதை வைத்துப் பார்க்கும் போது, எந்த விதத் தொற்று நோயும் இதுவரை பரவவில்லை. காய்ச்சலைப் பொறுத்தவரை தமிழக அளவில், ஒட்டு மொத்தமாக உள் நோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவிகிதம் குறைந்துள்ளது. குறிப்பாக, டெங்கு முழுவதுமாக ஒரு கட்டுக்குள் வந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

.