This Article is From Feb 18, 2019

மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறாரா? தமிழிசை விளக்கம்

கட்சி தலைமை சொன்னால் மக்களவை தேர்தலில் நான் போட்டியிட தயார் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறாரா? தமிழிசை விளக்கம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் பரப்பரப்பாக கூட்டணி அமைப்பதில் மும்முரம் செலுத்தி வருகின்றன. தமிழகத்தில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் கூட்டணி அமைக்கலாம் என்ற செய்தி வெளியாகி வருகிறது. ஏற்கனவே அதிமுக, பாஜக கூட்டணி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்பட்டது.

இதனை உறுதி செய்யும் வகையில், மத்திய அமைச்சர்கள் பியூஸ்கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக கட்சி கடும் முயற்சி எடுத்து வருகிறது. குறைந்தது 10 தொகுதிகளை பெற வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கூறியதாவது,

கட்சி தலைமை சொன்னால் மக்களவை தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன். கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடையும் நிலையில் உள்ளது.

விரைவில் பியூஷ் கோயல் தமிழகம் வருவார். நல்ல கட்சிகளுடன் பாஜகவின் மெகா கூட்டணி அமையும். ஓரிரு நாளில் கூட்டணி குறித்தும், போட்டியிடும் தொகுதிகள் குறித்தும் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.


 

.