மீன்களில் ஃபார்மலின் கலப்பது குறித்து கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கக் கூடிய பார்மலின், மீன்கள் சிதைந்து போகாமல் இருக்க பயன்படுத்தப்படுகிறது. இது கேன்சரை வரவழைக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசின் நடவடிக்கையால் 21,600 கிலோ ஃபார்மலின் கலந்து மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மீன்களைத் தடுக்க கேரள அரசு முயற்சி செய்து வருகிறது
பார்மலின் கலந்த மீன்களினால் ஏற்படும் உடல் பாதிப்புகள்
- புற்று நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்
- மூச்சுத்திணறல் ஏற்படலாம்
- 30 மிலி ஃபார்மலினில் 37% சதவிதம் ஃபார்மால்டிஹைட் உள்ளது. எனவே, பார்மாலின் உயிர் கொல்லியாகவும் இருக்கலாம்
- இரத்த புற்றுநோய்க்கு வாய்ப்பு அதிகம்
- குமட்டல், கண் எரிச்சல், போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன
- மூச்சு குழாய் அழற்சி, நுரையீரல் அழற்சி ஆகியவை உண்டாகும்
- உடல் ஒவ்வாமைகள் ஏற்படும்
- கல்லீரல், சிறுநீரக பாதிப்புகளும் ஏற்படும்
மீன்களில் பார்மலின் கலந்து உள்ளதா என்பதை கண்டறிய
- மீன் இறுக்கமாக இருத்தல்
- துர்நாற்றம் வீசக்கூடும்
- மீன்களை சுற்றி ஈக்கள் மொய்க்காது
இது போன்ற அறிகுறிகளை கண்டால், மீன் வாங்குவதை தவிர்க்கவும். பார்மலின் உள்ள மீன்களை ஒடும் நீரில் 10-12 நிமிடங்களுக்கு கழுவ வேண்டும். இதனால் மீன்களில் உள்ள பார்மலின் அகற்றப்படும். பாத்திரத்தில் உள்ள நீரில் மீன்களை ஊற வைப்பதனால், ஃபார்மலினை நீக்க முடியாது
- உடலில் ஃபார்மலின் கலந்ததும் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
- வயிற்று வலி
- கல்லீரல் பாதிப்புகள்
- இரைப்பை பிரச்னைகள்
- தோல் பிரச்னைகள்
- ஆஸ்துமா போன்ற மூச்சு பிரச்னைகள்
உணவு பொருட்களின் காலாவதி அளவை நீண்ட நாட்களுக்கு நீட்டிக்க உதவும் ஃபார்மலின்,உடலுக்கு மிகவும் ஆபத்தானது. குறிப்பாக, மீன்களை ஃப்ரெஷ்ஷாக வைக்க ஃபார்மலின் பயன்படுத்தப்படுகிறது.