This Article is From Feb 09, 2019

‘5 ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வா?’- என்ன சொல்கிறார் அமைச்சர்

5 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு கொண்டு வரப்பட தமிழக அரசிடம் திட்டம் உள்ளதா என்பது குறித்து பதில் அளித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்

‘5 ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வா?’- என்ன சொல்கிறார் அமைச்சர்

ஈரோட்டில் அரசு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார் அமைச்சர் செங்கோட்டையன்

ஹைலைட்ஸ்

  • 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வாய்ப்பு
  • இது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு
  • தமிழக அரசு இன்னும் இந்த விஷயம் குறித்து முடிவெடுக்கவில்லை

பள்ளியில் பயிலும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு கொண்டு வரப்பட தமிழக அரசிடம் திட்டம் உள்ளதா என்பது குறித்து பதில் அளித்துள்ளார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன். 

ஈரோட்டில் அரசு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார் அமைச்சர் செங்கோட்டையன். அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது, ‘மத்திய அரசு, 5 மற்றும் 8 ஆம் வகுப்பிலிருக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வை, மாநில அரசு விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. அது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 

ஆனால், அப்படி ஒரு நடைமுறையை கொண்டு வர வேண்டுமா என்பது குறித்து தமிழக அமைச்சரவைதான் முடிவெடுக்க வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட முடிவாக இருக்காது. இது குறித்து நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்' என்று அவர் கருத்து கூறியுள்ளார். 
 

.