This Article is From Jun 10, 2020

கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றுள்ளதா? என்ன சொல்கிறார் பீலா ராஜேஷ்

தேவைக்கேற்ப சென்னைக்கு அதிக அளவில் மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றுள்ளதா? என்ன சொல்கிறார் பீலா ராஜேஷ்

கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றுள்ளதா? என்ன சொல்கிறார் பீலா ராஜேஷ்

கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றுள்ளதா? என்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று விளக்கம் அளித்துள்ளார். 

தமிழகத்தில் இதுவரை பரவி வந்த வீரியமில்லாத கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து, வீரியம் அதிகமுள்ள  'க்ளேட் A3i' ஆக உருமாறி பரவி வருகிறது என்கிற தகவல் மக்கள் அனைவரையும் மேலும் அச்சப்பட வைத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து இந்த வகை வைரஸ் தமிழகத்துக்கு வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதன் காரணமாகத் தீவிர பாதிப்புகள் அதிகரித்து, உயிரிழப்புகளும் அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியதாவது; கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார். 

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆராய மருத்துவக்கல்வி இயக்குநரகம், பொது சுகாதாரத்துறை, மாநகராட்சி அதிகாரி அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எதனால் உயிரிழந்தார்கள் என்பதை இந்த குழு ஆராயும். கொரோனா இறப்பு விகிதம், எண்ணிக்கை குறித்து அரசு வெளிப்படையாக தகவல்களை வெளியிட்டு வருகிறது.

சென்னையில் மட்டும் கொரோனா சிகிச்சை அளிக்க 1,536 சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதுநிலை மருத்துவ மாணவர்கள் 574 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். சென்னைக்கு 80 ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

மேலும் தேவைக்கேற்ப சென்னைக்கு அதிக அளவில் மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பேசிய அவர், கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன என தெரிவித்தார். இதையடுத்து மேலும் 5,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்காக பிரத்தியேக படுக்கைகள் ஏற்பாடு செய்ய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார். 

.