Read in English
This Article is From Jun 10, 2019

இந்த டயமண்டு ஒரே இடத்தில் இருக்கா இல்லை நகருதா..?- விழிபிதுங்க வைக்கும் மாயை

வாஷிங்டன் டி.சி-யில் இருக்கும் அமெரிக்கன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் ஆலிவர் ஃபிளின் மற்றும் ஆர்த்தர் ஷாபிரோ ஆகியோரால் இந்த ஒளியியல் மாயை உருவாக்கப்பட்டுள்ளது. 

Advertisement
விசித்திரம்

பர்பிள் நிறத்தில் இருக்கும் ஒரு டயமண்டு, க்ரே வண்ணத்தில் இருக்கும் பின்புறத்தில் இருக்கிறது. இந்த டயமண்டு ஒரே இடத்தில் இருந்தாலும், அது நகர்வது போல் தெரிவதுதான் இந்த மாயை. 

ஒளியியல் மாயை என்று சொல்லப்படும் ஆப்டிக்கல் இல்யூஷன் ஒன்று ட்விட்டர் மற்றும் பல சமூக வலைதளங்களில் படுவைரலாகி வருகிறது. இந்த மாயைக்குப் பெயர் ‘பெர்பெச்சுவல் டயமண்டு' என்று சொல்லப்படுகிறது. பர்பிள் நிறத்தில் இருக்கும் ஒரு டயமண்டு, க்ரே வண்ணத்தில் இருக்கும் பின்புறத்தில் இருக்கிறது. இந்த டயமண்டு ஒரே இடத்தில் இருந்தாலும், அது நகர்வது போல் தெரிவதுதான் இந்த மாயை. 

வாஷிங்டன் டி.சி-யில் இருக்கும் அமெரிக்கன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் ஆலிவர் ஃபிளின் மற்றும் ஆர்த்தர் ஷாபிரோ ஆகியோரால் இந்த ஒளியியல் மாயை உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த மாயையை ஆன்லைனில் ஷேர் செய்த ஷாபிரோ,  “இந்த டயமண்டு ஒரே இடத்தில் இருந்தாலும், மேல், கீழ், இடது, வலது என்று நகர்வதை உணர முடியும். உங்கள் ஸ்க்ரீனில் இருந்து விலக விலக இந்த நகரும் தன்மை குறையும். எவ்வளவு தூரம் நீங்கள் நகர வேண்டும் என்பதை சோதித்துப் பாருங்கள்” என்று பதிவிட்டிருந்தார். 
 

Advertisement

அந்த மாயை இதோ:

ஷாபிரோ இதைப் பதிவிட்டதில் இருந்து பலர் ட்விட்டரில் ஷேர் செய்து வருகின்றனர். லைக்ஸ்களும் அள்ளுகிறது. நீங்கள் இந்த மாயைப் பற்றி என்ன நினைக்கிறீங்க..?

Advertisement

Advertisement