This Article is From Jan 03, 2020

CAA “Kolam போராட்டத்தைத்” தொடங்கி வைத்தவருக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பா..?- பகீர் தகவல்

Kolam Protests - சென்னை, பெசன்ட் நகரில், குடியுரிமைச் சட்டம் மற்றும் என்ஆர்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிலர், கோலங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Advertisement
தமிழ்நாடு Written by

முறையாக அனுமதி பெறாமல் இந்த செயலை செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிய தமிழக போலீஸ், 6 பேர் மீது வழக்குத் தொடர்ந்தது.

Kolam Protests - குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏ மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடான என்ஆர்சிக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ‘கோலம் போடும் போராட்டத்தை' கையில் எடுத்துள்ளன. இந்தப் போராட்டங்களுக்கு வித்திட்டவர்களில் ஒருவரான காயத்ரி கந்தாடை என்பவருக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக தற்போது ஒரு தகவல் வந்துள்ளது. இந்தத் தகவலைக் கொடுத்தது சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன். 

சென்னை, பெசன்ட் நகரில், குடியுரிமைச் சட்டம் மற்றும் என்ஆர்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிலர், கோலங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அவர்கள் முறையாக அனுமதி பெறாமல் இந்த செயலை செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிய தமிழக போலீஸ், 6 பேர் மீது வழக்குத் தொடர்ந்தது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்துதான், ‘கோலம் போட்டு' பிரசாரம் செய்யும் யுக்தியைத் திமுக பின்பற்றியது. 

Advertisement

இந்த விவகாரம் குறித்து ஆணையர் விஸ்வநாதன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்திக் கொள்ள விரும்புகிறேன். யாரும் கோலம் போட்ட காரணத்திற்காக கைது செய்யப்படவில்லை. முதலில் சிலர் பெசன்ட் நகரில் 6,7 கோலங்களை சாலையில் போட்டுள்ளனர். பின்னர் ஒருவரின் வீட்டில் போடப்பட்டிருந்த கோலத்திற்குப் பக்கத்தில் No CAA, No NRC என்கிற வாசகங்களை எழுதியுள்ளனர். அப்போது அந்த வீட்டைச் சேர்ந்தவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

அதைத் தொடர்ந்துதான் காவல் துறை அங்கு சென்றது. கோலம் போட்டவர்களை நாங்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினோம். திடீரென்று அவர்கள் போலீஸுக்கு எதிராக கோஷம் எழுப்பத் தொடங்கினார்கள். அதற்குப் பிறகுதான் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினோம். இதிலிருந்து, நாங்கள் கோலம் போட்டதற்காக யாரையும் கைது செய்யவில்லை என்பது புரியும்.

Advertisement

இன்னோன்று, இந்தப் கோலம் போராட்டத்தில் கலந்து கொண்ட காயத்ரி கந்தாடை என்பவர் “Rights for all” என்கிற அமைப்பில் பணி செய்வதாக தனது முகநூல் பக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளார். இது, Association of All Pakistan Citizen Journalists என்பதைச் சேர்ந்த ஒரு பிரிவாக இருக்கிறது. இவர்களுக்கு இங்கு இருக்கும் அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் ஆதரவாகவும் இருக்கிறார்கள். இவர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த அளவுக்குத் தொடர்பு இருக்கிறது என்பதைப் பற்றி மேலும் விசாரணை நடத்தப்படும்,” என்று கூறி அதிரவைத்துள்ளார். ஆணையர் விஸ்வநாதன் பேசும் இந்த காணொளிக் காட்சியை எச்.ராஜா உள்ளிட்டோர் பகிர்ந்து வருகின்றனர். 

Advertisement