This Article is From Nov 26, 2018

‘மீண்டும் மக்கள் நலக் கூட்டணியா..?- திருமாவளவன் பதில்

திமுக-வுடன் தோழமையாக இருக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், முஸ்லிம் கட்சிகள் ஆகிய அனைவரும் ஒரே கூட்டணியாக மாற வேண்டும், வலுபேற வேண்டும் என்பதே எனது விருப்பம்’ - திருமாவளவன்

‘மீண்டும் மக்கள் நலக் கூட்டணியா..?- திருமாவளவன் பதில்

தமிழகத்தில் காலியாக இருக்கும் 20 தொகுதிகளுக்கு சீக்கிரமே இடைத் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், ‘மக்கள் நலக் கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதா?' என்ற கேள்விக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

திருநெல்வேலியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், ‘திமுக-வுடன் தோழமையாக இருக்கும் கட்சிகள் அதிகாரபூர்வமான கூட்டணியாக இன்னும் மாறவில்லை. தோழமையாக இருக்கும் கட்சிகள், கூட்டணி கட்சிகளாக மாற வேண்டும் என்பதை நான் முன்னரே பதிவு செய்துள்ளேன். அதைத் தான் இப்போதும் சொல்கிறேன்.

திமுக-வுடன் தோழமையாக இருக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், முஸ்லிம் கட்சிகள் ஆகிய அனைவரும் ஒரே கூட்டணியாக மாற வேண்டும், வலுபேற வேண்டும் என்பதே எனது விருப்பம்' என்றவரிடம்,

‘மக்கள் நலக் கூட்டணி மீண்டும் உருவாக வாய்ப்பிருக்கிறதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு திருமா, ‘மக்கள் நலக் கூட்டணிக்கான தேடல் தற்போது இல்லை. மதவாத சக்திகளுக்கு எதிரான கூட்டணி தற்போது அமைந்தேயாக வேண்டும். அதைத் தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் செய்கிறது' என்று பதிலளித்தார்.

.