This Article is From Aug 10, 2020

இது இந்தியாவா? ’இந்தி’-யாவா? மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

இந்தி தெரியாது என்று சொன்னதால், 'நீங்கள் இந்தியரா?' என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கனிமொழியை பார்த்துக் கேட்டுள்ளார். 

இது இந்தியாவா? ’இந்தி’-யாவா? மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

இது இந்தியாவா? ’இந்தி’-யாவா? மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”யாவா? என மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

முன்னதாக, தூத்துக்குடி எம்.பி கனிமொழி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பயணத்திற்கு முன்னதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கனிமொழியிடம் இந்தியில் ஏதோ கேட்டுள்ளார். கனிமொழி தனக்கு இந்தி தெரியாது என்றும், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுள்ளார். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியர்தானே என கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து தனது பயணத்தை தொடங்கிய கனிமொழி டிவிட்டரில் இது குறித்து, ‘இன்று விமான நிலையத்தில் ஒரு பாதுகாப்பு அதிகாரியிடம், இந்தி தெரியாது என்றும், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறும் கேட்டேன். அதற்கு அவர், ‘நீங்கள் இந்தியர்தானா?' எனக் கேட்டார். எப்போதிலிருந்து இந்தியராக இருப்பதென்றால், இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை உருவானது என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” எனக் கூறி #hindiimposition என்கிற ஹாஷ் டேக்கையும் பதிவிட்டிருந்தார். 

இதைத் தொடர்ந்து சிஐஎஸ்எஃப் தரப்பு, ‘இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். எந்த ஒரு குறிப்பிட்ட மொழியையும் திணிப்பது எங்கள் பாலிசியில் இல்லை' என்று விளக்கம் அளித்துள்ளது. அதற்கு கனிமொழி, நன்றி தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவத்தை அடுத்துப் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கனிமொழிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”யாவா? என மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, இந்தி தெரியாது என்று சொன்னதால், 'நீங்கள் இந்தியரா?' என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கனிமொழியை பார்த்துக் கேட்டுள்ளார். 

இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். 

.