திருவாரூரில் வரும் 28 ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் திமுக சார்பில் போட்டியிட வேண்டுமென்று தொண்டர்கள் சிலர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எம்.எல்.ஏ-வாக இருந்த தொகுதியான திருவாரூர், காலியாக இருப்பதால் அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட உள்ள தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர்தொகுதியில் இடைத் தேர்தல் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பாணை ஜனவரி3 ஆம் தேதி அதிகாரபூர்வமாக வெளியிடப்படும். அந்த தேதி முதலே, வேட்பு மனுத் தாக்கலும்தொடங்கப்படும். தேர்தலுக்கான வாக்குப்பதிவு 28 ஆம் தேதி நடக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை 31 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடுவாரா மாட்டாரா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிடச் சொல்லி கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், ‘நான் இடைத் தேர்தலில்போட்டியிடுவது குறித்து நாளை தெரிவிக்கப்படும்' என்று சூசக பதிலை கூறியுள்ளார்.