திருமணத் தம்பதிகளான் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால்
New Delhi: இந்தியாவின் மிகப் பிரபலமான தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி தொழிலதிபர் அஜய் பிரமாலின் மகனான ஆனந்த் பிரமாலை திருமணம் செய்து கொண்டார். இந்த பிரமாண்ட திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அம்பானியின் 27 மாடி வீடான ‘அன்டிலியா'வில் பெரிய அளவில் திருமண விழா நடைபெற்றது. அரசியல், பாலிவுட், விளையாட்டு, மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் உள்ள முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
விருந்தினர்கள் பட்டியலில் முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சரத் பவார், ராஜ்நாத் சிங், மம்தா பானர்ஜி, மேனகா காந்தி, என்.சந்திரபாவு நாயுடு, ரஜினிகாந்த், எச்.டி தேவ கவுடா, விஜய் ருபானி, சுரேஷ் பிரபு, ப. சிதம்பரம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். கடந்த வாரம் ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணத்திற்கு முந்தைய திருமணச் சடங்குகள் நடந்து முடிந்தன.
இந்த திருமணப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன
ஆனந்த் மற்றும் ஈஷா இருவரும் நீண்டகால நண்பர்கள். இரு குடும்பங்களும் 40 ஆண்டுகாலமாக குடும்ப நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
இஷா அம்பானி (27 ) தன்னுடைய இளநிலை பட்டப்படிப்பை யேல் பல்கலைக் கழகத்திலும் எம்.பி.ஏ பட்டப்படிப்பை ஸ்டான்போர் பல்கலைக்கழகத்திலும் படித்து முடித்தார். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரிடையல் மேனேஜ்மெண்ட் போர்ட்டில் இருந்து வருகிறார்.
ஈஷா அம்பானி திருமணத்தில் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி
அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமால் (33), பிரமால் நிறுவனத்தின் குழுமத் தலைவராக இருந்து வருகிறார்.
புதிதாக திருமணம் முடிந்த ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன்.
ஐஸ்வர்யா, அபிஷேக் மற்றும் ஆராதயா பச்சன் ஆகியோர் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
திருமணத்தில் கல்ந்து கொண்ட பிரணாப் முகர்ஜி
பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ்
கரிஷ்மா கபூர், கரீனாகபூர், மற்றும் சயிப் அலிகான்
திருமணத்தில் கல்ந்து கொண்ட ஹிலாரி கிளிண்டன்