This Article is From Jun 12, 2019

தேசிய புலனாய்வு அமைப்பு கோயமுத்தூரில் அதிரடி சோதனை

ISIS module case: காலை எட்டு மணிக்கு தொடங்கிய இந்த சோதனை ஏழு இடங்களில் நடைபெற்றது. அன்பு நகர், போத்தனூர், மற்றும் குனியமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

தேசிய புலனாய்வு அமைப்பு கோயமுத்தூரில் அதிரடி சோதனை

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர்.

Coimbatore:

கோயம்புத்தூரில் உள்ள ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ அதிரடி சோதனைகளை நடத்தியது. இலங்கையில் ஈஸ்டர் தின நாளில்  குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டவர்களுடன் சிலர் தொடர்பில் உள்ளதாகக் கருதி சோதனை நடைபெற்றது. 

காலை எட்டு மணிக்கு தொடங்கிய இந்த சோதனை ஏழு இடங்களில் நடைபெற்றது. அன்பு நகர், போத்தனூர், மற்றும் குனியமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. 

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனைகளின் போது இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமா அத் இயக்கத்தின் சஹ்ரானுடன் சிலருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

மற்றொரு குற்றவாளி கேரளா ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு உள்ள பாலக்காட்டைச் சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 29 வயதான அந்த இளைஞன் தற்கொலை படையாக மாறுவதற்கு மனதளவில் தயாராகி வந்து கொண்டிருந்ததாகக் கூறியிருந்தார்.

.