நேற்று தேசிய புலனாய்வு அமைப்பு கோவையில் ஏழு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தியது.
New Delhi: தேசிய புலனாய்வு அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ் தமிழ் தொகுதிப் பிரிவின் தலைவராக இருந்த முகமது அசாரூதினை கைது செய்துள்ளது. நேற்று தேசிய புலனாய்வு அமைப்பு கோவையில் ஏழு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தியது.
கைது செய்யப்படும்போது 14 மொபைல் போன்கள் 29 சிம் கார்டுகள் 10 பேன் டிரைவ்கள் 3 லேப்டாப், ஆறு மெமரி கார்டுகள், 4 கார்ட் டிஸ்குகள் ஒரு இண்டர்நெட் டாங்கில், 13 சிடிகள் / டிவிடி, 300 ஏர் கன் பில்லெட்ஸ் பல டாக்குமெண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சமூக ஜனநாயக கட்சியின் சில துண்டு பிரசுரங்கள் ஸ்கேனரின் கீழ் இருந்தன. மீட்கப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கியுள்ளது.
இந்த வழக்கு மே 30 தேதி கோயம்புத்தூரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 32 வயது முகம்மது அஷாருதீன் மேலும் 5 பேர் தலைமையிலான குழு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தத்தை சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்து இளைஞர்களை கவர்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21ம் தேதியில் இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமாக ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றது. இந்த தாக்குதலில் 258 பேர் உயிரிழந்தனர். 500 பேர் காயமடைந்தனர்.